சர்ச்சையில் கர்நாடகா சாமியார்.. சிறுமியை மடியில் தூக்கி வைத்து முத்தம்.. வெளியான வீடியோ
பெங்களூர்: கர்நாடகாவில் தன்னைத்தானே சாமியார் என்று கூறி கொள்ளும் ஒருவர் 7 வயது சிறுமியை தூக்கி தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதையடுத்து அந்த சாமியார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷாகாபூர் தாலுகா கோகி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வசித்து வருபவர் மல்லிகார்ஜுன முட்டவா.
இவர் தன்னை தானே சாமியார் என்று கூறி வருகிறார். இவர் அங்குள்ள கோவிலில் இருப்பதோடு, அங்கு வரும் மக்களுக்கு ஆசி வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தான் மகாராஷ்டிராவை சேர்ந்த தம்பதி தனது 7 வயது மகளுடன் சாமியார் மல்லிகார்ஜுன முட்டவாவை பார்க்க வந்தனர். அவர்களுக்கு ஆசி வழங்கினார். இந்த வேளையில் 7 வயது சிறுமியை அவர் கொஞ்சியுள்ளார்.
முத்தம்
மல்லிகார்ஜுன முட்டவா மடியில் தூக்கி வைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனை சிறுமியின் பெற்றோர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோவை பார்க்கும் பலரும் விமர்சனம் செய்தனர். சாமியார் மல்லிகார்ஜுன முட்டவா தவறான நோக்கத்தில் சிறுமியை மடியில் வைத்து முத்தமிட்டதாக கருத்து தெரிவித்தனர்.
சர்ச்சையான வீடியோ
இது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக கர்நாடகா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. மேலும் வீடியோவை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட மல்லிகார்ஜுன முட்டவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு – நோட்டீஸ்
இந்த புகாரை தொடர்ந்து கோகி போலீசார் சாமியார் மல்லிகார்ஜுன முட்டவா மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி யாதகிரி போலீஸ் சூப்பிரண்ட் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்துள்ளோம். தற்போது சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளோம். சாமியார் தவறு செய்யவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சாமியாரை அவர்கள் தான் வீடியோ எடுத்துள்ளனர். ஆனால் வீடியோவில் சிறுமி தயக்கத்துடன் இருக்கிறார். இதுபற்றி குழந்தைகள் நல கமிட்டியிடம் ஆலோசனை செய்தோம்.அவர்கள் அறிவுரையின்படி வழக்குப்பதிவு செய்துள்ளோம்'' என்றார்.
சாமியார் விளக்கம்
இதுபற்றி சாமியார் மல்லிகார்ஜுன முட்டவா கூறுகையில், ''நான் சிறுமியை தவறான நோக்கத்தில் அணுகவில்லை. என்னுடைய மகள் போல் தான் முத்தம் கொடுத்தேன். இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்'' என்றார்.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications