Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் எதிரிகளை ஒழிக்க.. எய்ட்ஸ் பாதித்த பெண்களுடன் பழகவிட்ட கர்நாடக பாஜக எம்எல்ஏ! பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா பாஜக எம்எல்ஏ முனிரத்னா கொலை மிரட்டல், பாலியல் வழக்கு என்று அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மேலும், அவர் தன் எதிரிகளை ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட பெண்கள் மூலம் ஹனி ட்ராப் செய்து, ஹெச்ஐவி பரப்பியதாக புகார் வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் முனிரத்னா. பாஜக நிர்வாகியான இவர், ராஜராஜேஷ்வரி நகர் சட்டமன்றதொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார். முனிரத்னா, கடந்த பாஜக ஆட்சியில் தோட்டக்கலை, திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும், சினிமா தயாரிப்பாளராகவும் இருந்தார். அரசியல் மற்றும் சினிமா மட்டுமல்லாமல் முனிரத்னாவுக்கு வில்லங்கமான முகமும் உள்ளது.

munirathna hiv

மொத்த கர்நடாக அரசியலும் அதுகுறித்துதான் பேசி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு முனிரத்னா, செலவராஜ் என்ற ஒப்பந்தாரரிடம் கமிஷன் கேட்டு மிரட்டிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய புகாரில் முனிரத்னா கைது செய்யப்பட்டார். இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முனிரத்னா மீது பாலியல் புகார் கொடுத்தார்.

கொலை மிரட்டல் வழக்கில், முனிரத்னாவுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அவரை பாலியல் வழக்கில் கைது செய்தது காவல்துறை. அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக விமர்சித்து வருகிறது. ஆனால், இதன் பின்னணியில் அதிர்ச்சி புகார் இருப்பதாக கர்நாடகா காவல்துறை கூறியுள்ள அந்தத் தகவல் கர்நாடகாவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

முனிரத்னா மீது பாலியல் வன்கொடுமை புகார் வைத்த பெண், தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்வதாகவும், ஹனி ட்ராப் செய்வதாகவும் முனிரத்னா மீது புகார் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தன் அரசியல் எதிரிகளை ஆஃப் செய்ய, ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட பெண்கள் மூலம் ஹனி ட்ராப் செய்து, மிரட்டி ஹெச்ஐவியும் பரப்பியதாக அதிர்ச்சி புகார் வைக்கப்பட்டது.

இதுகுறித்து பெங்களூர் புறநகர் தொகுதி முன்னாள் எம்.பி டி.கே சுரேஷ் கூறுகையில், "முனிரத்னா மிகவும் மோசமானவர். அவர் தன் எதிரிகளுக்கு ஹெச்ஐவி பரப்ப ஒரு நெட்வொர்க் வைத்துள்ளார். இதனால் மாநில அரசு இதை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த நெட்வொர்க்கில் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை முனிரத்னா மீது பாலியல் புகாரளித்துள்ள பெண்ணும் உறுதி செய்கிறார். அந்தப் பெண் மேலும் கூறுகையில், "முனிரத்னா ஹனி ட்ராப் செய்வதற்காக ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட சில பெண்களை வைத்துள்ளார். அவர்கள் மூலம் தன் எதிரிகளை ஹனி ட்ராப் செய்வார். இதன் மூலம் அவர்களை மிரட்டுவதுடன், அவர்களுக்கு ஹெச்ஐவியும் பரப்பி வந்தனர். அப்படி ஒரு முறை தன் எதிரியை பழிவாங்க, ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூலம் ஹனி ட்ராப் செய்ய திட்டமிட்டார். இதற்கு அந்தப் பெண்ணுக்கு என்னையும் உதவி செய்ய சொன்னார்.நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்." என்று கூறியிருந்தார்.

இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "இதுபோன்ற வித்தியாசமான புகார்கள் வருவது இதுதான் முதல்முறை. இதை எப்படி அணுகுவது என்று நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறியுள்ளனர். அதேபோல அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் முனிரத்னா ஹனிட்ராப்புக்கு பயன்படுத்திய பெண்ணுக்கு ஹெச்ஐவி பரிசோதனை செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. அதில் அந்தப் பெண்ணுக்கு ஹெச்ஐவி பாசிட்டிவ் என்று வந்தால், இந்த நெட்வொர்க்கில் இருந்தவர்கள் மற்றும் அவர்களால் ஹனி ட்ராப் செய்யப்பட்டவர்களை கண்டறிவோம். அவர்களுக்கும் ஹெச்ஐவி பரிசோதனை செய்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+