‛நேரில் வாங்க’.. ஜேபி நட்டா, அமித் மாளவியாவுக்கு சிக்கல்.. கர்நாடகா போலீஸ் சம்மன்! விடாத காங்கிரஸ்
பெங்களூர்: லோக்சபா தேர்தலையொட்டி கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அனிமேஷன் வீடியோ பதிவிட்டது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் ஐடி விங்க் பொறுப்பாளார் அமித் மாளவியா ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி பெங்களூர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளுக்கு மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளன. அதன்படி கடந்த மாதம் 26ம் தேதி 14 தொகுதிகளுக்கும், அதன்பிறகு நேற்று 14 தொகுதிகளுக்கும் தேர்தல் என்பது நடந்து முடிந்தது.
இதற்கிடையே தான் தேர்தல் வேளையில் கர்நாடகா பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அனிமேஷன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், ‛‛காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான நிதியை இஸ்லாமியர்களுக்கு வழங்குவதாக கூறி உள்ளது'' என்பதை காட்டும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதுதொடர்பாக கர்நாடகா காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவுரையின்படி அந்த கட்சியின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா இந்த அமிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக ஜேபி நட்டா, அமித் மாளவியா, கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தான் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜகவின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா ஆகியோருக்கு பெங்களூர் ஹைகிரவுண்ட் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதில் ‛‛சம்மன் கையில் கிடைத்த 7 நாட்களில் காலை 11 மணிக்கு ஹைகிரவுண்ட் போலீஸ் நிலைய விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications