பிரஜ்வல் கேஸ்: தேவகவுடாவை தற்கொலை செய்ய சொன்ன பாஜக மாஜி எம்பி... கொந்தளித்த ஜேடிஎஸ் தொண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 300 பெண்களை நாசமாக்கி 3,000 ஆபாச வீடியோக்கள் எடுத்த ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்னும் தற்கொலை செய்யவில்லையே என விமர்சித்த பாஜக முன்னாள் எம்பி சிவராமே கவுடா வீடு மீது ஜேடிஎஸ் தொண்டர்கள் சராமரியாக முட்டைகளை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பாஜகவின் எம்பியாக இருந்தவர் சிவராமே கவுடா. பிரஜ்வல் ரேவண்ணா எம்பியின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக சொல்லப்படும் தேவராஜ் கவுடாவுடன் சிவராமே கவுடா பேசும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த ஆடியோக்கள் ஒன்றில், பிரஜ்வல் வீடியோ வெளியான நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா இந்த நேரம் தற்கொலை செய்திருக்க வேண்டும் என சிவராமே கவுடா விமர்சித்திருந்தார். இது ஜேடிஎஸ் தொண்டர்களை கொந்தளிக்க வைத்துவிட்டது.

Karnataka Prajwal Case JD S Cadres Protest against Ex MP Shivarame Gowda

இதனையடுத்து பெங்களூரில் உள்ள சிவராமே கவுடா வீட்டுக்கு நேற்று நள்ளிரவில் பெருந்திரளாக சென்ற ஜேடிஎஸ் தொண்டர்கள், வீடு மீது சரமாரியாக முட்டைகளை வீசினர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் ஜேடிஎஸ் தொண்டர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஜேடிஎஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில், பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் தேவகவுடாவின் உயிரைப் பறிக்க சதி நடக்கிறது. பிரஜ்வல் பென் டிரைவ் தொழிற்சாலையின் ஒரிஜனல் ஓனர் துணை முதல்வர் டிகே சிவகுமார்தான். ஆபாச வீடியோக்கள் எப்படி வெளியானது என தேவராஜ் கவுடா விரிவாகவே தெரிவித்துள்ளார்.

Karnataka Prajwal Case JD S Cadres Protest against Ex MP Shivarame Gowda

கர்நாடகா காங்கிரஸ் அரசானது, பிரதமர் மோடியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும் குமாரசாமி தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தவும் தேவகவுடாவின் உயிரை பறிக்கவும் ஜேடிஎஸ்- பாஜக கூட்டணியை உடைக்கவும் சதித் திட்டம் தீட்டியிருக்கிறது. இதற்காக துணை முதல்வர் டிகே சிவகுமார் ரூ100 கோடி முதலீடு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவகவுடா தமது 92-வது பிறந்த நாளை கடந்த 18-ந் தேதிதான் கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பெண் பலாத்கார வழக்கில் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+