ரூபா Vs சிந்தூரி மோதலில் ட்விஸ்ட்.."பாஜகவில் இணைய பிளான்" - வெளியான புதிய ஆடியோ.. வெடித்த சர்ச்சை
அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் பாஜகவில் இணைந்து அரசியலுக்கு வர ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி திட்டமிட்டதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா பேசும் புதிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
பெங்களூரு: அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் பாஜகவில் இணைந்து அரசியலுக்கு வர ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி திட்டமிட்டதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா பேசும் புதிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் இடையேயான சண்டை, ஆளும் கர்நாடக பாஜக அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவகாரத்தில் உடனே தலையிட்ட முதல்வர் பசவராஜ் பொம்மை, இருவரிடமும் விளக்கம் கேட்குமாறு தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டதுடன், நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
கர்நாடகாவில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா மற்றொரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி இடையே ஏற்பட்ட மோதல், அவர்கள் இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு கொண்டு போய் இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

ரூபா ஐபிஎஸ்
கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்தபோது, அவருக்கு பணம் வாங்கி கொண்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக அதிர வைத்தவர் ரூபா ஐபிஎஸ். அப்போது தான் அவர் இந்தியா முழுவதும் யார் என்பது தெரியவந்தது. ரூபா ஐபிஎஸ் கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக தற்போது வரை இருந்தார். இப்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரூபாய் ஐபிஎஸ் அண்மையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தற்போது அறநிலையத்துறை ஆணையராக உள்ள ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் மீது 19 புகார்களை முன்வைத்தார். அதில் சில இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆகும்.

சமாதானம்
குற்றச்சாட்டுகளில் சில முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம். ரோகிணி சிந்தூரி மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்தபோது மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ மகேஷுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் என்றும் ஆனால் தற்போது மகேஷுடன் ரோகிணி சமாதானம் பேசுகிறார். அதேபோல், கொரோனா பாதிப்புகளுக்கு நடுவில் 2021ம் ஆண்டு அரசு குடியிருப்பில் ரோகிணி வசித்த வீட்டில் சொகுசு நீச்சல் குளம் கட்டப்பட்டிருந்தது.

19 குற்றச்சாட்டுகள்
கோலார் பகுதியில் பணியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரவி இறப்புக்கும் ரோகிணிக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகப்படுவதாகவும் ரூபா ஐபிஎஸ் கூறி அதிரவைத்தார். கர்நாடகாவில் ஊழல் புகார்களிலும் ரோகிணிக்கு தொடர்பு உள்ளதாகவும் அவை விசாரிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அரசியல்வாதிகளுடன் கட்டப்பஞ்சாயத்து செய்து ரோகிணி பேரம் பேசுகிறாரா என்றும் ரூபா கேள்வி எழுப்பினார். இப்படியாக 19 குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ரூபா ஐபிஎஸ். அத்துடன் 3 ஐஏஏஸ் அதிகாரிகளுக்கு தனது அந்தரங்க புகைப்படங்களை ரோகிணி அனுப்பி வைத்ததாகவும் ரூபா குற்றம்சாட்டியதுடன், சில புகைப்படங்களையும் வெளியிட்டார்.

சட்டப்படி நடவடிக்கை
இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து பதிலடி கொடுத்த ரோகிணி ஐஏஏஸ், தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வைத்த புகைப்படங்களை ரூபா எடுத்துள்ளதாகவும், ரூபாவுக்கு மனநிலைசார்ந்த பிரச்னை உள்ளதாகவும் அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் கூறினார். மேலும் தம்மைப்பற்றி தேவையில்லாத புகார்களை ரூபா முன்வைத்து வருவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ரோகிணி விளக்கமளித்தார்.

ரோகிணி கணவர் புகார்
இதனிடையே ரோகிணி போன்று மார்ப் செய்து அந்தரங்க புகைப்படங்களை ரூபா வெளியிட்டதாக ரோகிணியின் கணவர் சுதீர் ரெட்டி, பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே மனநல பாதிப்பு குணம் அடைய வாழ்த்துக்கள் என்று சொன்னதால் கோபத்தின் உச்சிக்கு போன ரூபா, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படங்களை அழித்தது பற்றி கூறுவாரா? சவாலை எதிர்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை ரோகிணி கணவர் மூலம் என் மீது புகார் கொடுக்க வைத்திருக்கிறார் என்றார்.

ரூபா பேசிய ஆடியோ
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் பாஜகவில் இணைந்து அரசியலுக்கு வர திட்டமிட்டதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா பேசுவது போன்று புதிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில், ரூபாவின் கணவர் மனிஷ் முத்கிலிடம் பல்வேறு வருவாய் நிலங்கள் மற்றும் சட்டப் பிரச்சினைகள் உள்ள இடங்களை வாங்குவது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி விசாரித்ததாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் ரூபா கூறியுள்ளார்.

ரோகிணி மீது புகார்
மேலும்,'புற்றுநோய்க்கு நிகரானவர் ரோஹினி' என்பதை தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் விவகாரத்திலேயே தான் அறிந்து கொண்டதாகவும், டி.கே.ரவிக்கு நேர்ந்தது தனக்கு நேர்ந்துவிட கூடாது என ஐயம் தெரிவித்துள்ள ரூபா, தம்மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிக்க... குமாரசாமி மற்றும் தேவகவுடா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவியை ரோஹினி நாடி இருக்கிறார் என்றும் ரூபா தெரிவித்திருப்பது, கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications