கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்!
பெங்களூர்: கர்நாடக அரசியலில் நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பதற்றத்துக்கு முடிவு கட்டும் வகையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. முதல்வர் சித்தராமையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உள் அதிகாரப் போட்டிக்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வராகப் இருந்தார். மொத்தம் 8 ஆண்டுகள் 12 நாட்களுக்கு மேல் பதவியில் இருந்த அவர், கர்நாடகாவின் மறைந்த முன்னாள் முதல்வர் டி. தேவராஜ் அர்ஸின் நீண்ட கால சாதனையை முறியடித்த பெருமையைப் பெற்றவர். பின்தங்கிய வகுப்பினரின் சின்னமாகக் கருதப்படும் அவரது அரசியல் பயணம் இப்போது ஒரு முக்கிய திருப்பத்தை எதிர்கொள்ள உள்ளது.

ஆளுநருடன் முக்கிய சந்திப்பு
கர்நாடக ராஜ் பவன் உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி, சித்தராமையா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ராஜினாமா செய்வதை அறிவித்தார். இந்த சந்திப்புக்கு முன்பாக, சித்தராமையா தனது அமைச்சரவை சகாக்களுடன் விடைபெறும் காலை உணவு விருந்து ஒன்றை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.
டி.கே. சிவகுமார் புதிய முதல்வர்?
சித்தராமையாவின் ராஜினாமா, துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு புதிய முதல்வர் பதவிக்கான வழியைத் திறக்கும் எனக் கருதப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் நீடித்து வந்த உட்கட்சி அதிகாரப் போட்டி இதன் மூலம் முடிவுக்கு வரும் என்றாலும், இதுவரை கட்சி மேலிடம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனினும், சித்தராமையா தரப்பு இந்த மாற்றத்தை எளிதாக ஏற்காது எனக் கூறப்படுகிறது. டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, சித்தராமையா காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து, சட்டமன்றக் கட்சி (CLP) கூட்டத்தைக் கூட்டி முறைப்படி தேர்தல் நடத்த வலியுறுத்தி வருகிறார். இந்த வாக்கெடுப்பில் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவை முன்னிறுத்த சித்தராமையா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மூத்த தலித் தலைவரான பரமேஸ்வராவை முதல்வராக்கி, கர்நாடகாவின் முதல் தலித் முதல்வரை உருவாக்கும் வரலாற்றுப் பெருமையைப் பெற சித்தராமையா விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் பங்கு
ராகுல் காந்தியின் நேரடி அறிவுறுத்தலின் பேரிலேயே சித்தராமையா இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருமுறை முதல்வர் வாய்ப்பை வழங்கிய ராகுலின் வார்த்தைக்கு மதிப்பளித்தே இந்த தியாகத்தைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் சித்தராமையா இடையே நடைபெற்ற முக்கிய ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த நகர்வுகள் வேகம் பெற்றன
.
காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு மற்றும் ராஜ்ய சபா எம்பி பதவி வழங்க முன்வந்துள்ளது. ஜூன் 8-ம் தேதி ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால், அவரை டெல்லிக்கு அழைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால் 77 வயதான சித்தராமையாவுக்கு டெல்லி அரசியலில் ஆர்வம் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தில் விதான சவுதாவில் மலரஞ்சலி செலுத்திய சித்தராமையா, "புதிய மாற்றங்கள் குறித்து நாளை விரிவாகப் பேசுவேன்" என சூசகமாகக் கூறியிருந்தார். கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று பெங்களூரு வந்து ஆட்சி மாற்றத்தை சுமுகமாக முடிக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இன்று மதியம் சித்தராமையா ஆளுநரைச் சந்தித்த பிறகு கர்நாடக அரசியலின் அடுத்த கட்டம் தெளிவாகும். இந்த மாற்றம் கர்நாடக அரசியலை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications