"பயமாக இருக்கு.. பாதுகாப்பு தாங்க".. கர்நாடக துப்பாக்கிச்சூட்டில் எஸ்கேப்பானவர் பாதுகாப்பு கோரி வீடியோ.. உருக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேரை வனத்துறையினர் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருந்து எஸ்கேப்பான மஹிமா தாஸ் என்பவர் ரகசிய இடத்தில் இருந்து தான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வனத்துறையினர் தன்னை சாட்சியாக்க நினைப்பதாகவும், தனக்கு பயமாக இருக்கு என்றும் போலீசாரிடம் பாதுகாப்பு கோரி உருக்கமாக பேசியுள்ளார்.

karnataka-shootout-afraid-to-come-out-now-fourth-man-who-escaped-from-the-forest-encounter-now-rel

கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் காவிரி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா எனும் பகுதியின் அருகே ஹேலேமுரிதட்டி வனப்பகுதியில் ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.மான் வேட்டையாடியதாக கூறி வனத்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 3 பேர் பலியாகினர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் தொமியார்பாளையா கிராமத்தில் வசித்து வருவதும் அவர்கள் தமிழர்கள் என்பதும் தெரியவந்தது. இதனால் தமிழகத்தில் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கர்நாடக வனத்துறையினர் தமிழர்கள் என்று அறிந்தே 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுகொன்றதாகவும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இன்று வரை கர்நாடகா அரசு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே தான் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் தப்பிய மஹிமா தாஸ் பாதுகாப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அவர் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை. ரகசிய இடத்தில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: ''ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலை 5.20 மணி இருக்கும். இந்த நேரத்தில் நான் மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தேன். வனத்துறையினர் வந்ததோடு, உடனடியாக துப்பாக்கியை எடுத்து சுட்டனர்.

இதில் நான் பயந்துவிட்டேன். சம்பவ இடத்தில் இருந்து விரைந்து ஓடிப்போய்விட்டேன். 5 நிமிடத்துக்கு பிறகு எந்த சத்தமும் இல்லை. எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் வீட்டிற்கு ஓடிவந்துவிட்டேன். என்னை மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போது வனத்துறையினர் என்னை சாட்சியாக தேடிவருகின்றனர். எனக்கு பயமாக இருகு்கிறது. போலீசார் தான் எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+