மாஜி பிரதமர் மாளிகையில் துப்பாக்கி முனையில் பெண் பிரமுகரை பலாத்காரம் செய்த பிரஜ்வல்-தொடரும் ஷாக்!
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் விருந்தினர் மாளிகையில் துப்பாக்கி முனையில் பெண் பிரமுகரை மிரட்டியே 3 ஆண்டுகளாக பலாத்காரம் செய்தார் ஜேடிஎஸ் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா என 3-வது குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,000 ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மீது அடுத்தடுத்து கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா எம்.எல்.சி.யின் மகன்தான் பிரஜ்வல். ஹாசன் தொகுதி முன்னாள் எம்பி. லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார். அப்போது பிரஜ்வல் தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. ஆனால் ஆபாச வீடியோக்கள் வெளியான உடனே ஜெர்மன் நாட்டுக்கு தப்பி ஓடினார் பிரஜ்வல்.

அதேநேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம் காட்டியது கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு. இதனால் வேறுவழியே இல்லாமல் நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
தற்போது பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்குகளில் அடுத்தடுத்து குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. பிரஜ்வல் மீதான 3-வது பலாத்கார வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 1691 பக்க குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சித் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் மாவட்ட பெண் பிரமுகரை பலாத்காரம் செய்த வழக்கு இது.
பிரஜ்வலின் தாத்தா, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகை ஒன்று ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த விருந்தினர் மாளிகையில் பிரஜ்வலை ஹாசன் மாவட்ட ஜேடிஎஸ் பெண் பிரமுகர் உதவி கேட்டு சந்தித்திருக்கிறார். ஆனால் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பிரஜ்வல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
விருந்தினர் மாளிகைக்கு வராவிட்டால் கணவரை கொலை செய்வேன் என துப்பாக்கியை காட்டி மிரட்டியே 3 ஆண்டுகளாக ஜேடிஎஸ் பெண் பிரமுகரை பிரஜ்வல் வேட்டையாடி இருக்கிறார். அத்துடன், அந்த பெண் பிரமுகரை வீடியோ காலில் அழைத்து நிர்வாணமாக நிற்க வேண்டும் எனவும் பிரஜ்வல் மிரட்டி இருக்கிறார். அதேபோல அந்த பெண் பிரமுகரை பலாத்காரம் செய்த போது வீடியோவையும் பிரஜ்வல் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இந்த வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போனை பிரஜ்வல் அழித்துவிட்டார் எனவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications