3000 ஆபாச வீடியோ: பிரஜ்வல் தாயார் பவானி ரேவண்ணாவிடம் நாளை விசாரணை.. ஒத்துழைக்காவிட்டால் அதிரடி கைது?
பெங்களூர்: 3,000 ஆபாச வீடியோ வழக்கில் ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தாயார் பவானி ரேவண்ணாவை நாளைய விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் புதிய சம்மன் அனுப்பி உள்ளனர்.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா 3000 ஆபாச வீடியோக்களில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் ஹாசனில் மட்டுமல்ல கர்நாடகாவில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ஹாசனில் பாஜக ஜேடிஎஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார் பிரஜ்வல். இத்தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்தது. இதனையடுத்து 3000 ஆபாச வீடியோக்கள் தொடர்பாக கர்நாடகா அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதேநேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார்.
இதனிடையே இந்த வழக்கில் பிரஜ்வலின் தந்தை முன்னாள் அமைச்சர் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். தற்போது ரேவண்ணா ஜாமீனில் இருக்கிறார்.
இந்த பின்னணியில் ஜெர்மனியில் பதுங்கி இருந்த பிரஜ்வல், இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையம் வந்திறங்கினார். பெங்களூர் விமான நிலையத்திலேயே பெண் போலீஸ் படை பிரஜ்வல் ரேவண்ணாவை அதிரடியாக கைது செய்தது. தற்போதும் பிரஜ்வலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து பிரஜ்வல் தாயார் பவானி ரேவண்ணாவையும் விசாரணைக்கு அழைத்துள்ளது சிஐடி. ஏற்கனவே பவானி ரேவண்ணாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு அஜராகவில்லை. இந்த நிலையில் நாளைய விசாரணைக்கு பவானி ரேவண்ணா ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு புது சம்மன் அனுப்பி இருக்கிறது சிறப்பு புலனாய்வுக் குழு. இதற்கு முந்தைய விசாரணைக்கான சம்மன்களுக்கு பவானி ரேவண்ணா பதில் கூட தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் நாளைய விசாரணை பவானி ரேவண்ணாவுக்கு நெருக்கடி தரக் கூடியதாக கிடுக்குப்பிடி விசாரணையாக இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
பவானி ரேவண்ணா தம்மிடம் நடத்தப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்தால் அவரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்யவும் சாத்தியம் இருக்கிறது என்கின்றன பெங்களூர் வட்டாரங்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications