நான் குனியமாட்டேன்? அமைச்சருக்கு ‛ஷூ’ போட்டுவிட்ட ‛கன்மேன்’.. வெளியான வீடியோ! கர்நாடகாவில் சர்ச்சை
பெங்களூர்: கர்நாடகாவில் சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பாவின் காலுக்கு அவரது பாதுகாவலரான ‛கன்மேன்' ஷூ போட்டுவிடும் வீடியோ வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து சித்தராமையா முதல்வரானார். டிகே சிவக்குமார் துணை முதல்வரானார்.

இதையடுத்து அமைச்சரவை அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்சி மகாதேவப்பா சமூக நலத்துறை அமைச்சரானார்.
இவர் முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரை சேர்ந்தவர். அதாவது மைசூர் மாவட்டம் டி நரசிப்புரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தான் மகாதேவப்பா அமைச்சராக உள்ளார். மேலும் இவரும், சித்தராமையாவும் மிகவும் நெருக்கமானவர்கள். கடந்த 2013-2018 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது மகாதேவப்பா அமைச்சராக இருந்தார்.
அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் தற்போது சமூக நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் நேற்று அமைச்சர் மகாதேவப்பா தார்வார் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி மாணவர்களின் சமூக நலத்துறை விடுதிகளை ஆய்வு செய்ய சென்றார். சப்தாபூர் பகுதியில் உள்ள கவுரி சங்கர் விடுதியில் அவர் திடீரென ஆய்வு செய்தார்.
Peak Elitism of Congress Party in Dharwad Karnataka - Social Welfare Minister HC Mahadevappa gets his shoes put on by his Gunman pic.twitter.com/tT47K5eTZr
— Rosy (@rose_k01) November 8, 2023
உணவின் தரம் குறித்து அங்கு தங்கியிருந்தவர்களிடம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் விடுதி சமையலறைக்கு சென்று அவர் பார்வையிட சென்றார். அப்போது அவர் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு அவர் சமையலறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது பாதுகாவலர் (Gunman) ஷுவை கையில் எடுத்து அவரது காலில் மாட்டிவிட்டார்.
இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அமைச்சர் மகாதேவப்பாவை பாஜகவினர் உள்பட பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications