சித்தராமையாவுக்கு நெருக்கடி-முடா முறைகேடு- லோக் ஆயுக்தா விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா மனைவிக்கு முடா நிறுவனம் முறைகேடாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது தொடர்பால லோக் ஆயுக்தா விசாரணை நடத்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்று நீக்கிய நிலையில் இன்று லோக் ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது சித்தராமையாவுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
கர்நாடகா முதல்வர் சித்தரமையா பதவிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது முடா வீடு ஒதுக்கீடு முறைகேடு. சித்தராமையா மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை முடா ஒதுக்கீடு செய்தது. முடா என்பது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம். ஆனால் மனைவி பார்வதியின் நிலத்தை முடா சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது; அதற்கு நட்ட ஈடுதான் 14 வீட்டு மனைகள் என்கிறார் சித்தராமையா.

இது தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு ஆளுந்நர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்தார். இதனடிப்படையில் சித்தராமையா மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் ஆளுநரின் அனுமதிக்கு எதிராக சித்தராமையா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பு வழக்கும் வரை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த பின்னணியில் சித்தராமையாவின் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்று டிஸ்மிஸ் செய்தது. மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சித்தராமையாவுக்கு எதிரான வழக்கை விசாரித்தது. இந்த முடா முறைகேடு குறித்து லோக் ஆயுக்தா விசாரிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கி வருகிறது. தற்போது லோக் ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுக்கும் என கூறப்படுகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications