தினசரி 14 மணி நேரம் வேலை.. கர்நாடக அரசு புதிய சட்டம்? கடுங்கோபத்தில் ஐடி ஊழியர்கள்.. பின்னணி என்ன
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரிக்கை விடுத்த நிலையில், இதை அங்கு ஐடி ஊழியர்கள் சங்கம் கடுமையாகச் சாடியுள்ளது. தினசரி 14 மணி நேர வேலை என்பது மனிதாபிமானமற்றது என்றும் இது பல்வேறு சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஆட்குறைப்பிற்கும் வழி வகுக்கும் ஐடி ஊழியர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினசரி 14 மணி நேர வேலை என்பது மனிதாபிமானமற்றது என்றும் இது பல்வேறு சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஆட்குறைப்பிற்கும் காரணமாக அமையலாம் என்றும் ஐடி ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை: ஐடி நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றுக் கர்நாடகா அரசு அம்மாநிலத்தின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961ஐ திருத்துவது குறித்துப் பரிசீலித்து வருகிறது. 12 மணி நேரம் வேலை நேரம் + 2 மணி நேரம் ஓவர் டைம் என்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி தேவை என்பதே இப்போது அங்குள்ள ஐடி நிறுவனங்களின் முன்மொழிவாக இருக்கிறது. தற்போது தொழிலாளர் சட்டங்களின்படி 10 மணி நேரம் + 2 மணி நேரம் ஓவர் டைம் இருக்கும் நிலையில், அதை நீட்டிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கிறது.
இது தொடர்பாக ஐடி வட்டாரங்கள் கூறுகையில், "ஐடி, பிபிஓ துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் சூழல் ஏற்படலாம். அதேநேரம் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு 125 மணி நேரத்திற்கு மிகாமல் பணி நேரம் இருப்பதை நாம் பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.
கர்நாடக அரசு: இந்த விவகாரம் குறித்து அரசு முதற்கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும், விரைவில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் கர்நாடக அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இருப்பினும், வேலை நேரத்தை நீட்டிக்கும் இந்த நடவடிக்கையைக் கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கம் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த சட்டம் மட்டும் அமலுக்கு வந்தால் தற்போது பணியில் இருக்கும் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலையே இல்லாமல் போய்விடும் என்று தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு ஷிப்ட்: இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "இந்தத் திருத்தம் அமலுக்கு வந்தால் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று ஷிப்ட் முறைக்குப் பதிலாக இரண்டு ஷிப்ட் முறை அமலுக்கு வரும். இதனால் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகும்" என்றனர். மேலும், நீட்டிக்கப்பட்ட வேலை நேரத்தால் ஐடி ஊழியர்களிடையே ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த ஆய்வுகளையும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறுகையில், "ஏற்கனவே ஐடி துறையில் 45% ஊழியர்கள் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளையும், 55% பேர் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். இந்த நேரத்தில் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும். ஊழியர்களை மனிதர்களாகப் பார்க்காமல் வெறும் இயந்திரங்களாக மட்டுமே கர்நாடக அரசு பார்க்கிறது. ஐடி நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டாம் என்று சித்தராமையாவை கேட்டுக் கொள்கிறோம்.
ஊழியர்கள் இயந்திரம் இல்லை: பணியாளர்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கை, சோஷியல் வாழ்க்கை இருக்கிறது என்பதையும் எங்களை மனிதர்களாகக் கருதவும் கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. மாறாக, அவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் இயந்திரமாக மட்டுமே ஊழியர்களைக் கருதுவது போலத் தெரிகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
IT Jobs: சென்னை டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. மே 29ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு












Click it and Unblock the Notifications