பெங்களூரில் தமிழக அரசு பஸ்களில் "தமிழ்நாடு" பெயர் கூட இல்லை! ஸ்டிக்கர் ஒட்டிய கர்நாடக தமிழ் அமைப்பு
பெங்களூர்: ஒவ்வொரு நாளும் கர்நாடகத் தலைநகர் பெங்களுருக்கு தமிழ்நாட்டில் இருந்து பல பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்தப் பேருந்துகளில் வெறுமன மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் என்று மட்டுமே இருப்பதாக கர்நாடகத் தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டினர். இதனால் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகம் கொண்ட ஸ்டிக்கரை அந்த அமைப்பினர் ஒட்டினர்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் கணிசமான அளவுக்குத் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஐடி தலைநகராக இருக்கும் பெங்களூரில் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் இருந்து தினமும் பலரும் பெங்களூருக்கு பேருந்து மூலமாகவே செல்கிறார்கள். இதனால் தமிழக அரசு சார்பிலும் பெங்களூருக்கு பேருந்து சேவை இயக்கப்படுகிறது.

அதேநேரம் தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகம் இல்லை என்று பெங்களூரில் உள்ள கர்நாடகத் தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டினர். இதனால் பெங்களூர் வந்த தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகம் கொண்ட ஸ்டிக்கரை கர்நாடகத் தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஒட்டினர்.
கேரளா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில்.. அந்தந்த மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது. அதாவது கேரள அரசு பேருந்துகளில் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் என்றும் புதுவை பேருந்துகளில் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் என்றும் இருக்கிறது.
ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் வெறுமன மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் என்று மட்டுமே இருப்பதாக கர்நாடகத் தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டினர். இதன் காரணமாக மற்ற மாநிலங்களைப் போலத் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளிலும் மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் என்பதற்கு முன்பு தமிழ்நாடு என்ற வாசகத்தைச் சேர்த்து தமிழ்நாடு மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் என்று மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதற்காகத் தமிழ்நாடு அரசின் பேருந்துகளில் தமிழ்நாடு என்று ஸ்ப்ரே மூலம் பெயிண்ட் செய்தனர். மேலும், தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரையும் அவர்கள் ஒட்டினர்.
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications