Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிகே சிவக்குமார் முதல்வராக பதவியேற்பார்! காங்கிரஸ் எம்எல்ஏ பரபர பேச்சு.. அப்போ சித்தராமையா நிலை?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இப்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்பார் என்றும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இது நிச்சயம் நடக்கும் என்றும் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜ் வி சிவலிங்கா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இப்போது கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் நேரடியாக ஆட்சியில் உள்ளன. குறிப்பாக கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியை அமைத்தது.

Karnataka to Get Rotational CM MLA Claims DK Shivakumar Will Take Over in December

கர்நாடக அரசியல்

அப்போதே அங்கு யார் முதல்வர் என்பதில் சிறு குழப்பம் ஏற்பட்டது. சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே யார் முதல்வர் என்பதில் கேள்வி எழுந்தது. இருப்பினும், டெல்லி தலைமை எடுத்த முடிவின்படி சித்தராமையா முதல்வராகவும் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டனர். இருப்பினும், அவ்வப்போது டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்பது தொடர்பாகப் பேச்சுக்கள் அங்கு எழும்.

இப்போது சித்தராமையாவுக்கு எதிராக முடா விவகாரம் எழுந்துள்ள நிலையில், மீண்டும் முதல்வர் பதவி குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே வரும் டிசம்பர் மாதம் டி.கே.சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்பார் என்றும் அதன் பிறகு அவரது தலைமையிலேயே கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை நடத்தும் என்றும் கூறி கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜ் வி சிவலிங்கா பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

முதல்வராகும் டிகே சிவக்குமார்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். டிசம்பர் மாதத்திற்குள் இது நடக்கும். நானே உங்களுக்கு எழுதி தரேன்.. வரும் டிசம்பர் மாதம் டி.கே.சிவக்குமார் நிச்சயம் முதல்வராகப் பதவியேற்பார். அவரே அதன் பிறகு அரசை வழிநடத்துவார். அடுத்த 2028 தேர்தலிலும் காங்கிரஸ் வெல்லும். இதன் மூலம் அடுத்த 7.5 ஆண்டுகளுக்கு டி.கே.சிவக்குமாரே முதல்வர் பதவியில் தொடர்வார்.

சிவக்குமார் கர்நாடக தேர்தல்களில் சரித்திரம் படைத்துள்ளார். காங்கிரஸை ஒருங்கிணைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இதற்காக அவர் நிறையத் தியாகங்களையும் செய்துள்ளார். அவரது மௌனத்தையோ, அமைதியையோ பலவீனம் என்று தவறாக நினைத்து விடக்கூடாது. டெல்லி தலைமைக்கு எல்லாமே தெரியும். நிச்சயம் டிசம்பருக்குள் அவர் முதல்வர் ஆவார். இதை 100க்கு 100 என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

சிவக்குமார் தான் காரணம்

அவருக்கு (டிகே சிவக்குமார்) நீதி கிடைக்கவில்லை என்றால், காங்கிரஸ் கட்சியில் இருப்பது அர்த்தமற்றது. அவர் எடுத்த முயற்சியாலேயே 75-80 பேர் தேர்தலில் வென்று, புதிதாகச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அவர் கட்சிக்கு இன்றியமையாதவர்.. டெல்லி தலைமை அவரை முதல்வர் ஆக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அவரை முதல்வராக்குவது காங்கிரஸை பலப்படுத்தவே செய்யும்" என்றார்.

கர்நாடக காங்கிரஸ்

கர்நாடகாவில் கடந்த 2023ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் என மூன்று கட்சிகளுமே தனித்துக் களமிறங்கியது. அங்கு 113ல் வென்றால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற சூழலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்றது. ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்ட பாஜகவால் 66 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஜேடிஎஸ் கட்சியால் 37 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அப்போதே யார் முதல்வர் என்பதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகே சித்தராமையா முதல்வராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+