1,680 மில்லியன் லிட்டர் பஞ்சம்! பெங்களூரில் முதல்வர் சித்தராமையா வீட்டிலேயே தண்ணீர் இல்லை.. கொடுமை
பெங்களூர்: பெங்களூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டிலேயே தண்ணீர் இல்லாமல் போனது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கே டேங்கர்கள் நிறுத்தப்பட்டு தண்ணீர் வசதி கொடுக்கப்பட்டது.
கோடை காலம் இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக பெங்களூர் திண்டாட தொடங்கி உள்ளது. பெங்களூரில் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் டேங்கர்கள் விலையை உயர்த்துவதாக அங்கே குடியிருப்பாளர்கள் புகார் கூறுகின்றனர். பெங்களூருவின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் டேங்கர் தண்ணீரை நம்பியுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் டேங்கர் நிறுவனங்களே தண்ணீர் வழங்க முடியாமல் தவிக்க தொடங்கி உள்ளன.
என்ன காரணம்?: மழைப்பற்றாக்குறை, ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பது, நிலத்தடி நீர் குறைதல், உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமை, தண்ணீர் டேங்கர் மாஃபியா எனப் பல காரணங்கள் தற்போதைய தண்ணீர்ப் பிரச்னைக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன..
பெங்களூரின் நீர் விநியோகத்திற்கு பொறுப்பான அமைப்பான பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), காவிரி ஆற்றில் இருந்து அதிக தண்ணீரைப் பெறுகிறது. ஆனால் இந்த முறை குறைவான மழையால் காவிரியில் தண்ணீர் இல்லை. காவிரி நீர் இணைப்புகள் இல்லாத பகுதிகள் போர்வெல் அல்லது டேங்கர் தண்ணீரை நம்பியே உள்ளன. அவையும் வற்ற தொடங்கி உள்ளன.
பெங்களூரில் காவிரியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 1,450 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீரைப் பெறும் அதே வேளையில், நகரம் இன்னும் ஒரு நாளைக்கு 1,680 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறைதான் தண்ணீர் பிரச்சனைக்கு பெரிய காரணம்.
தனியார் டேங்கர்கள் இதனால் தண்ணீர் விலையை இருமடங்காக விலை உயர்த்தியுள்ளனர். 1,500 ரூபாய் என்று டேங்கருக்கு விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில், தனியார் லாரிகளுக்கு, 6,000 ரூபாய் செலவு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் இது வெறும் 700 ரூபாயாக இருந்தது. அங்கே இன்னும் கோடை காலமே தொடங்கவில்லை. அதற்குள் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் வீடு: பெங்களூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டிலேயே தண்ணீர் இல்லாமல் போனது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கே டேங்கர்கள் நிறுத்தப்பட்டு தண்ணீர் வசதி கொடுக்கப்பட்டது.
எச்சரித்தபடியே தண்ணீர் பஞ்சம்: தென் ஆப்ரிக்க நகரமான கேப் டவுனில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்நகரின் கடைசி சொட்டு தண்ணீரும் தீர உள்ள நிலையில் ஜீரோ டேவை நெருங்குகிறது கேப் டவுன். இந்நிலையில் கேப்டவுனை போன்றே கடைசி சொட்டு தண்ணீரை அடுத்து இழக்கவுள்ள உலகின் 11 நகரங்களின் பட்டியலை கடந்த 2018ம் வருடம் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.
அதன்படி அந்த பட்டியலில் பிரேசிலின் சா பாலோ நகர் முதலிடத்திலும் இந்தியாவின் பெங்களூரு நகரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. பெங்களூரு நகரில் பாதிக்கும் மேற்பட்ட குடிநீர் தீர்ந்துவிடும், அதன்பின் குடிநீர் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications