அன்றே கணித்த கார்த்தி சிதம்பரம்! குசும்பை பாருங்க.. Wordle & Netflix ரசிகர்களுக்கு சமர்ப்பணமாம்!
பெங்களூர் : முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி ப.சிதம்பரம் இன்று கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனது கணிப்பு தொடர்பாக பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த ட்வீட்டை தனது வேர்டில் - நெட்ஃப்ளிக்ஸ் ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கணிப்புகளை தெரிவித்து வந்தனர். அந்தவகையில், தமிழ்நாடு எம்.பியான கார்த்தி ப சிதம்பரம் தனது கணிப்பை கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ட்விட்டரில் வெளியிட்டார்.

கார்த்தி சிதம்பரம் கணிப்பு : கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜக 60 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதுதான் எனது கணிப்பு'' எனத் தெரிவித்திருந்தார்.
கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிவித்து வந்தன. இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கணிப்பு பற்றி அவரது ட்வீட்டிலேயே பலரும் விவாதித்தனர்.

லேட்டஸ்ட் ட்வீட் : இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் கணிப்பு கிட்டத்தட்ட தேர்தல் முடிவுகளில் பலித்துள்ளது. தனது பழைய கணிப்பு பதிவை குறிப்பிட்டு இன்று ரீ-ட்வீட் செய்துள்ளார் கார்த்தி சிதம்பரம். மேலும் இந்த ட்வீட்டை தனது வேர்ட்லி மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் ரசிகர்களுக்கு சமப்பணம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் தினமும் தனது ட்விட்டர் பக்கத்தில் வேர்ட்லி எனும் வார்த்தை புதிர் விளையாட்டை பதிவு செய்வார். அதேபோல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் கடந்த மார்ச் 25ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
கடும் விமர்சனம் : இதைப் பார்த்த நெட்டிசன்கள், கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதவியை இழந்துள்ளார். அவருக்காக களத்தில் இறங்கிப் போராடுவதை விட்டுவிட்டு இப்படியா வேர்ட்லி விளையாடுவது என கடுமையாக விமர்சனம் செய்தனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்த செய்தி வந்து கொண்டிருந்தபோது கார்த்தி சிதம்பரம் நெட்பிளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம் என்று கருத்து கேட்டதற்கு அப்போது பெரும் விமர்சனம் எழுந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனை வந்த நேரத்தில் கார்த்தி சிதம்பரம் கூலாக, நெட்ஃப்ளிக்ஸ் சஜ்ஜெசன் கேட்டதையும், வேர்ட்லி விளையாடியதையும் நெட்டிசன்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். அவர்களைச் சீண்டும் விதமாகவே தனது ட்வீட்டை அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications