கர்நாடகா தேர்தல்.. காங்.,க்கு 140.. பாஜகவுக்கு 60 தான்.. இது கார்த்தி சிதம்பரத்தின் கருத்து கணிப்பு!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் எம்பியான கார்த்தி ப சிதம்பரம் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். இதில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டி கிடைக்கும் எனவும், கடந்த முறையை விட பாஜக மிகவும் குறைவான இடங்களில் தான் வெற்றி பெறும் எனவும் கணித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10ல் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 13ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

கர்நாடகாவில் பல கட்சிகள் களமிறங்கி உள்ளன. இருப்பினம் பாஜக, காங்கிரஸ் கட்சி இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. மாறாக எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி மீண்டும் அரியணையில் ஏறும் நோக்கத்தில் களப்பணி ஆற்றி வருகிறது. காங்கிரஸ் சார்பில் 2 கட்டங்களாக 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக சார்பில் நேற்று ஒரே கட்டமாக 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேலும் இந்த 2 கட்சிகளுக்கும் சவால் அளிக்கவும், தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் முனைப்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஆம்ஆத்மி கட்சியும் களமாட தயாராகி வருகிறது. ஆம்ஆத்மி 2 கட்டங்களாக 140 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தனிப்பெரும்பான்மையை பெற அனைத்து கட்சியினரும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை பல அமைப்புகள் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறுகின்றன. சில கருத்து கணிப்புகளில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும், சில கருத்து கணிப்புகள் காங்கிரஸ் அதிக இடங்களில் ஜெயிக்கும் என கூறுகின்றன. இருப்பினும் இரு கட்சிகளுக்கும் மெஜாரிட்டிக்கான 113 தொகுதிகள் கிடைக்காது என கருத்து கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.
இந்நிலையில் தான் நேற்று பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் கர்நாடகா சட்டபை தேர்தல் தொடர்பாக கார்த்தி ப சிதம்பரம் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று இரவு 189 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இந்த கணிப்பை கார்த்தி ப சிதம்பரம் வெளியிட்டுள்ளார். இதுபற்றி கார்த்தி ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜக 60 தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதுதான் எனது கணிப்பு'' என தெரிவித்துள்ளார். இதற்கு தற்போது பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications