சம்யுக்தா.. ஸ்போர்ட்ஸ் பிராவில் தப்பில்லை.. நானே ஷார்ட்ஸுடன் ஓடி இருக்கிறேன்.. கவிதா ரெட்டி விளக்கம்
பெங்களூர்: நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் உடையை நான் கேள்வி கேட்கவில்லை, சம்யுக்தா ஹெக்டே பொய் சொல்கிறார் என்று காங்கிரஸ் உறுப்பினர் கவிதா ரெட்டி கூறியுள்ளார். இவர்களுக்கு இடையிலான மோதல் பெரிய பிரச்சனை ஆன நிலையில் கவிதா ரெட்டி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
பெங்களூரில் அகாரா லேக் பார்க்கில் நடிகைசம்யுக்தா ஹெக்டேவிற்கும் காங்கிரஸ் உறுப்பினர் கவிதா ரெட்டிக்கும் நடந்த சண்டை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்யுக்தா ஹெக்டே பார்க்கில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து பயிற்சி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாடையுடன் இவர் பயிற்சி எடுத்ததை கவிதா ரெட்டி தட்டி கேட்டதாக சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார். இது தொடர்பாக வீடியோவும் வெளியாகி உள்ளது. அதோடு கவிதா ரெட்டி தன்னை அவமானப்படுத்தியாக சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார்.

கவிதா ரெட்டி
இந்த நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் கவிதா ரெட்டி தன் தரப்பு நியாயத்தை இதில் தெரிவித்துள்ளார். அதில், நான் சம்யுக்தா ஹெக்டே உடன் பேசிய போது, அவர் ஒரு நடிகை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அவர்கள் சத்தமாக பாடலை போட்டு அதை கேட்டுக்கொண்டு இருந்தனர். பார்க்கில் இப்படி பாடல் கேட்பது தவறு என்று கூறினேன். பாடலை நிறுத்துங்கள். இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

மோசமாக திட்டினார்
இதுதான் எல்லா பார்க்கிலும் இருக்கும் விதி. இதையடுத்து நான் பார்க் காவலர்களை அழைத்து சம்யுக்தாவை வெளியேற்றும் படி கூறினேன். ஆனால் சம்யுக்தா ஹெக்டே அவர்களிடம் மிக மோசமாக பேசினார். இதனால் நான் சம்யுக்தா ஹெக்டேவிடம், காவலர்களிடம் மன்னிப்பு கேட்கும்படி கூறினேன். ஆனால் சம்யுக்தா ஹெக்டே அதை கேட்கவில்லை. என்னை மோசமாக அவர்கள் திட்டினார்கள்.

கெட்ட வார்த்தை
சம்யுக்தா ஹெக்டேவின் தோழி ஒருவர் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினார். அப்போதுதான் எனக்கு கோபம் வந்தது. இதனால் நான் அவரின் கன்னத்தில் அறைய சென்றேன். ஆனால் நான் அவரை அறையவில்லை. ஆனால் இதை சம்யுக்தா ஹெக்டே வெளியே சொல்லும் போது தவறாக குறிப்பிட்டு இருக்கிறார். எதோ நான் சம்யுக்தா ஹெக்டேவின் உடையை குறித்து பேசியதாக கூறியுள்ளார்.

உடை கட்டுப்பாடில்லை
சம்யுக்தா ஹெக்டே சொல்வது முழுக்க முழுக்க பொய். நான் அவரின் உடை குறித்து பேசவே இல்லை . நான் எப்போதும் பெண்களின் உடை குறித்தும், அதில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் பேசியது கிடையாது. இதை பற்றி சம்யுக்தா ஹெக்டே பொய்யான விஷயங்களை கூறுகிறார். அந்த பார்க்கில் எந்த ஆடை கட்டுப்பாடும் கிடையாது.

நானே ஷார்ட்ஸ்
தங்களுக்கு பிடித்த உடையை யார் வேண்டுமானாலும் அணியலாம். நானே அங்கு ஷார்ட் அணிந்து ஓடி இருக்கிறேன். யாரும் யாரையும் கேள்வி கேட்டது இல்லை. அப்படி இருக்கும் போது, சம்யுக்தா ஹெக்டேவின் உடையை யார் கேள்வி கேட்க போகிறார்கள். அவர்கள் சத்தமாக பாட்டு போட்டதுதான் இந்த பிரச்னைக்கு காரணம். அதை மறைக்கவே சம்யுக்தா ஹெக்டே இப்படி கதையை கட்டி விடுகிறார், என்று கவிதா ரெட்டி கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications