நடுக்காட்டில்.. மரத்தில் அழுகி தொங்கிய சடலங்கள்.. பெங்களூரு அருகே பரபரப்பு!
ஐடி நிறுவன காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
பெங்களூரு: சாதியை காரணம் காட்டியபடியே இருந்தால், வேறு வழி தெரியாமல் காதலர்கள் காட்டு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. அழுகிய நிலையில் இவர்களது சடலங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் அபிஜித் மோகன் - ஸ்ரீலட்சுமி.. இருவரும் காதலர்கள்.. மோகனுக்கு 25 வயது, ஸ்ரீலட்சுமிக்கு 21 வயது!

இருவருமே பெங்களூருவிலுள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். ஆனால், இவர்கள் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர, எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சாதியை காரணம் காட்டியபடியே இரு குடும்பத்தினரும் இருந்ததால், காதலர்கள் மனம் உடைந்து போய்விட்டனர். இந்த கோபத்தில், போன அக்டோபர் மாசம் முதல் தங்கள் வீட்டு நபர்களிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டனர். மேலும் போனிலும் 2 பேரும் நீண்ட நாட்களாக தொடர்பு கொண்டு பேசாமலும் இருந்துள்ளனர். செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
நவம்பர் மாதம் 23ம் தேதியன்று ஸ்ரீலட்சுமி தன்னுடைய தாய்மாமாவுக்கு போன் செய்து, "இதுவரை எங்களால் உங்களுக்கு நிறைய தொல்லைகள் இருந்துள்ளன. இனிமேல் அப்படி எதுவும் நடக்காது" என்று மட்டும் சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டாராம்.
இதற்கு பிறகுதான் பயந்து போன பெற்றோர், பெங்களூரு போலீசில் புகார் தெரிவிக்கவும், அதனடிப்படையில் போலீசார் இவர்களை தேடி வந்தனர். அப்போதுதான், 29-,ம் தேதி இருவரின் பிணங்களையும் அழுகிய நிலையில் போலீசார் மீட்டனர்.
இருவருமே ஒரு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், இவர்களது தற்கொலைகள் உடனடியாக தெரியவில்லை. அதனால்தான் சடலங்கள் அழுகி கிடந்தன. சாதியை காரணம் காட்டி, திருமணத்துக்கு எதிர்ப்பு சொன்னதால், இருவருமே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications