"குப்பை.. அருவெறுப்பாக இருக்கிறது.." ஆர்சிபி மேட்சுக்கு பின் கொதித்த மூத்த வீரர்.. நடந்தது என்ன?
பெங்களூர் : நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின் பெங்களூர் மூத்த வீரர் வெளியிட்ட போஸ்ட் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ப்ளே ஆப் சுற்று போட்டியில் நேற்று கொல்கத்தா வென்றது. இனி கொல்கத்தா டெல்லியை எதிர்கொள்ள வேண்டும். டெல்லி அல்லது கொல்கத்தாவில் ஒரு அணி பைனல் செல்லும்.
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான ப்ளே ஆப் சுற்று போட்டியில் பெங்களூர் தோல்வி அடைந்து வெளியேறியது. முதலில் ஆடிய பெங்களூர் அணி 138-7 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய கொல்கத்தா 19.4 ஓவரில் எளிதாக 139 ரன்கள் எடுத்து வென்றது.

ரசிகர்கள்
இந்த நிலையில் போட்டிக்கு பின்பாக பெங்களூர் அணியின் வீரர்களை ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். முக்கியமாக பெங்களூர் அணியில் ஆடி வரும் டேன் கிறிஸ்டின், ஏபி டி வில்லியர்ஸ் போன்ற வீரர்களை கடுமையாக ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்தனர். அதிலும் டேன் கிறிஸ்டின் மனைவியை கூட சிலர் மோசமாக விமர்சனம் செய்தனர்.

விமர்சனம்
கெட்ட வார்த்தைகளில் மோசமாக ரசிகர்கள் சிலர் திட்டியது கடும் சர்ச்சையானது. டேன் கிறிஸ்டியன் கூட, என் மனைவியின் இன்ஸ்ட்டா போஸ்டில் இருக்கும் கமெண்ட்களை பாருங்கள். நான் இன்று சரியாக ஆடவில்லை. ஆனால் அதுதான் விளையாட்டு. அப்படித்தான் இருக்கும். என் மனைவியை இதற்காக நீங்கள் விமர்சிக்க வேண்டாம். அவரை விட்டுவிடுங்கள், என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

டேன் கிறிஸ்டியன்
இந்த நிலையில்தான் மேக்ஸ்வெல் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், ஆர்சிபிக்கு இது சிறந்த சீசன். ஆனால் நாங்கள் நினைத்த சில விஷயங்களை எங்களால் செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால் அது எங்களின் சிறப்பான சீசனை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடாது. சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் சில குப்பையான கருத்துக்கள் எங்களுக்கு அருவெறுப்பை ஏற்படுத்துகின்றன.

மேக்ஸ்வெல்
நாங்கள் மனிதர்கள். எங்களால் முடிந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம். எங்களால் முடிந்ததை நாங்கள் தினமும் வெளிப்படுத்தி வருகிறோம். மற்றவர்களை அசிங்கமாக பேசுவதை நிறுத்திவிட்டு கொஞ்சம் நல்லவராக இருங்கள். எங்களின் உண்மையான ரசிகர்களுக்கு நன்றி. சமூக வலைத்தளங்களில் சில மோசமான நபர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் மனிதர்கள்
அவர்கள் சமூக வலைத்தளங்களை மேலும் மோசமான ஒரு தளமாக மாற்றிவிட்டனர். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய டீம் மேட், உறவினர் யாரையாவது நீங்கள் தவறாக பேசினால் உங்களை உடனே பிளாக் செய்துவிடுவேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள், என்று மேக்ஸ்வெல் குறிப்பிட்டுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications