‛‛மோடி போஸ்டரை நான் ஏன் பிடிக்கனும்’’.. மறுத்த பஞ்சாயத்து தலைவி பரிதா பேகம்! கொதித்துப்போன பாஜக
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடியின் போட்டோ பொரித்த போஸ்டரை பஞ்சாயத்து தலைவி வாங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாரகி வருகிறது. இந்நிலையில் தான் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி 'விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை' எனும் நிகழ்ச்சியை ஜார்கண்டில் தொடங்கி வைத்தார். இதன்மூலம் நாடு முழுவதும் பிரசார வாகனங்கள் சென்று வருகின்றன.
ஜனவரி மாதம் 25ம் தேதிக்குள் 2.60 லட்சம் கிராம பஞ்சாயத்து மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான நகர உள்ளாட்சி அமைப்புகளில் இந்த யாத்திரையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடகாவில் இந்த யாத்திரை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கொப்பல் மாவட்டம் குக்கனூர் தாலுகா குதிரிமோடி கிராம பஞ்சாயத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பஞ்சாயத்தில் தலைவராக இருப்பவர் பரிதா பேகம். இவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இந்த நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடியின் போட்டோ பொறிக்கப்பட்ட போஸ்டர்கள் வழங்கப்பட்டது.

பஞ்சாயத்து தலைவியான பரிதா பேகத்திடமும் அந்த போஸ்டர் வழங்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடியின் போட்டோவுடன் கூடிய போஸ்டரை பரிதா பேகம் வாங்க மறுத்தார். நான் பிரதமர் போஸ்டரை வாங்க மாட்டேன். இது மத்திய அரசின் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி என தெரிவித்தார். அந்த போஸ்டரை வழங்கியவர் மீண்டும் மீண்டும் கூறினாலும் கூட பரிதா பேகம் அதனை பெற மறுத்துவிட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பரிதா பேகமின் இந்த செயலுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications