கர்நாடகா: எதிர்க்கட்சி தலைவர் யார்? டெல்லி தலைமைக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் கூண்டோடு போர்க்கொடி?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை இன்னமும் நியமிக்காமல் இருக்கும் பாஜக மேலிடத்துக்கு எதிராக அம்மாநில பாஜக எம்.எல்.ஏக்களே போர்க்கொடி தூக்கி இருப்பது டெல்லியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் கடந்த மே 10-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களில்தான் வென்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களைக் கைப்பற்றியது.
பாஜக கடந்த காலங்களை போல எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டாலும் ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு பெரும்பான்மைக்கு அதிகமான எம்.எல்.ஏக்கள் பலத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. இருந்த போதும் கர்நாடகா காங்கிரஸில் நிலவும் சித்தராமையா- டிகே சிவகுமார் இடையேயான மோதலில் எப்படியும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என இலவு காத்து கொண்டிருக்கிறது பாஜக.
இன்னொரு பக்கம், பாஜகவிலும் பெரும் புகைச்சலும் அதிருப்தியும் நிலவுகிறது. சட்டசபை தேர்தல் முடிவடைந்து 6 மாதங்களாகியும் இன்னமும் மாநில பாஜக தலைவர் நியமிக்கப்படவில்லை; இன்னமும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார் என அறிவிக்கவும் இல்லை. இதனை கையில் எடுத்த காங்கிரஸ், பாஜகவை கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறது. இது கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகா சட்டசபை குளிர்கால கூட்டம் பெலகாவியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடருக்குள் எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை டெல்லி மேலிடம் அறிவிக்க வேண்டும்; அப்படி அறிவிக்காமல் போனால் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம் என பாஜக எம்.எல்.ஏக்களே அறிவித்துள்ளனர். கர்நாடகா மாநில பாஜக எம்.எல்.ஏக்கள், அக்கட்சியின் டெல்லி தலைமைக்கு எதிராக இப்படி கலகக் குரல் எழுப்பி இருப்பது கர்நாடகாவில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில் எடியூரப்பா இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த களேபரத்தை பயன்படுத்தி மகனுக்கு மாநில தலைவர் பதவி அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏதேனும் ஒன்றை பெற முடியாதா? என முயற்சிக்கிறாராம் எடியூரப்பா. கர்நாடகா நிலைமை மோசமாகி இருப்பதால் டெல்லி பாஜக தலைமையும் ஏதேனும் ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆலோசனைகளை தீவிரப்படுத்தி இருக்கிறதாம்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications