வாள் போன்ற கண்ணழகி! சரோஜாதேவியின் கண்கள் தானம்! மல்லேஸ்வரம் வீட்டிற்கு விரைந்த மருத்துவர்கள்
பெங்களூர்: மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்படுகிறது. பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் கண் வங்கி பிரிவில் இருந்து கண்களை தானமாக பெற மருத்துவர்கள் அவருடைய வீட்டிற்கு வருகை தந்தனர்.
சரோஜாதேவி கன்னடத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொண்டு அந்த மொழி படங்களிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று தனது 87வது வயதில் பெங்களூருவில் காலமானார். வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அவர் மரணமடைந்தார். ஜனவரி 7, 1938 அன்று கர்நாடகாவின் மைசூரில் பிறந்தார்.
"கன்னடத்து பைங்கிளி", "அபிநய சரஸ்வதி" போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டார். 1955 ஆம் ஆண்டு தனது 17 வயதில் கன்னடத் திரைப்படமான 'மகா கவி காளிதாசா' மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இந்திய சினிமாவின் பங்களிப்பிற்காக 1969 இல் பத்மஸ்ரீ விருதும், 1992 இல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இழப்பு இந்திய சினிமா உலகிற்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
அவருடைய நடை, உடை, கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழ், முக்கியமாக அவருடைய கண்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த கண்களில் மை வைத்து அவர் உருட்டி உருட்டி பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும்.
அப்படிப்பட்ட கண்களை இறந்ததும் தானம் செய்ய சரோஜாதேவி எழுதி வைத்துள்ளாராம். இதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் கண் வங்கியில் இருந்து கண்களை தானமாக பெற மருத்துவர்கள் வருகை தந்தனர்.
பெங்களூரு கொடிகேஹள்ளி தோட்டத்தில் கணவர் ஹர்ஷாவின் சமாதி அருகில் சரோஜா தேவியின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. அவரது உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவர் நடித்த படங்களில் இருந்து பாடல்கள் ஆங்காங்கே ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications