வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை.. 5 பேரை கடித்து குதறிய சோகம்.. கர்நாடகாவில் நடந்த திக்திக் சம்பவம்
பெங்களூர்: கர்நாடகாவில் திடீரென்று சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. 3 கிராமங்களில் ஜாலியாக உலா வந்தது. சிறுத்தையை பார்த்து பொதுமக்கள் மிரண்டு ஓடினர். திடீரென்று ஆக்ரோஷமான சிறுத்தை 2 பெண்கள் உள்பட 5 பேரை கடித்து குதறியது. வீட்டில் புகுந்து சிறுத்தை தாக்கியதால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயினர்.
கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டம் துருவக்கெரே தாலுகாவில் கோனிதுமகூரு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றிய பிற கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. கோனிதுமகூரு, தேவஹள்ளி, நவுவனஹள்ளி உள்ளிட்ட கிராமங்களை சுற்றி சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது.
இதனால் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் நேற்று மாலையில் அந்த சிறுத்தை திடீரென்று கோனிதுமகூரு கிராமத்துக்குள் நுழைந்தது. இந்த சிறுத்தையை பார்த்த மக்கள் தங்களின் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர்.
ஆள்நடமாட்டம் இல்லாத கிராமத்தில் சிறுத்தை ஜாலியாக உலா வந்தது. இதற்கிடையே தான் சிறுத்தை நடமாட்டம் பற்றி அறியாத வனஜாக்சி, உச்சம்மா, போரேகவுடா ஆகியோர் தங்களின் வீட்டுக்கு வெளியே நின்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு சென்ற சிறுத்தை அவர்கள் 3 பேரையும் கடித்துள்ளது. சிறுத்தை தாக்கிய அதிர்ச்சியில் அவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
இதில் மிரண்டுபோன சிறுத்தை உடனடியாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. கோனேதுமகூருவில் இருந்து அந்த சிறுத்தை அருகே உள்ள தேவஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்தது. அங்கு லிங்கேகவுடா மற்றும் சேகர் ஆகியோரை தாக்கியது. இதில் சேகர் என்பவரை வீடு புகுந்து சிறுத்தை தாக்கியது. இந்த சமயத்தில் சுதாரித்த சேகர் சிறுத்தையை தனது வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே ஓடிவந்தார்.
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து சென்றனர். சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த 5 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த சிறுத்தை நவுவனஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு சிறுத்தை யாரையும் தாக்கவில்லை. அங்கிருந்து தான் கோனேதுமகூரு மற்றும் தேவஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்து 5 பேரை தாக்கி உள்ளது.
-
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம்












Click it and Unblock the Notifications