ஓடும் பஸ்ஸில் பாய்ந்து வந்து ஏறிய சிறுத்தை.. வாகனத்தில் தொங்கி கொண்டே உறுமி.. பெங்களூரில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சுற்றுலா பயணிகளின் வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, திடீரென சிறுத்தை ஒன்று தாவி குதித்து ஏறிவிட்டது. இதைப்பார்த்து பயணிகள் அனைவரும் அலறி துடித்துவிட்டனர். இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்துள்ளது.. அன்றைய தினம், சுற்றுலா பயணிகள் சிலர் சபாரி வாகனத்தில் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்த்து கொண்டிருந்தனர்.

leopard karnataka

சபாரி வாகனம்: அப்போது திடீரென ஒரு சிறுத்தை பஸ் மீது தாவி குதித்து, ஜன்னல் கண்ணாடியை கால்களால் அடித்தது... ஆனால் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முடியாததால், உடனே பஸ்சின் மேற்கூரை மீது ஏறியது.

இதனால் சுற்றுலா பயணிகள் பதற்றமும், பயமும் அடைந்து கதறினார்கள்.. இதையடுத்து, பஸ் டிரைவர் சமயோஜிதமாக செயல்பட்டு, பஸ்ஸை நிறுத்திவிடாமல் இயக்கி கொண்டேயிருந்தார்.. மெதுவாக வண்டியை இயக்கிய நிலையில், அந்த சிறுத்தை கீழே குதித்து, தன்னுடைய இருப்பிடத்துக்கு நோக்கி சென்று விட்டது...

ஜன்னல் கதவுகள்: இந்த சபாரி பஸ் ஜன்னல் கதவுகள் இரும்பு கம்பிகளால் பின்னப்பட்டவையாகும்.. அதனால் சுற்றுலா பயணிகள் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்நிலையில், பூங்காவின் நிர்வாக இயக்குனர் சூர்யா சென் சொல்லும்போது, "சுற்றுலா பயணியரை சபாரி அழைத்துச் செல்லும்போது, வாகனங்களின் அனைத்து கண்ணாடிகளும் அடைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதிசெய்து கொள்ளும்படி, டிரைவர், ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது..

சிறுத்தைகள்: பொதுவாக சிறுத்தைகள், கூச்ச கூபாவம் கொண்ட விலங்காகும்.. தினமும் வனத்துறை வாகனங்களை பார்த்து பழகியதாலும், அந்த வாகனங்களில் செல்வோரால் எந்த தொந்தரவு இல்லை என்று தெரிந்து கொண்டதாலும், வாகனம் மீது இந்த சிறுத்தை தொற்றிவிட்டது" என்றார்.

எனினும், வனத்துறை வேனின் மீது ஒரு சிறுத்தை பாய்ந்து தொங்கி சத்தமாக உறுமும் இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. சபாரி செல்வோர் கவனமாக இருக்க வேண்டும், தேங்க் காட் என்றெல்லாம் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+