கர்நாடகா: பாஜக தலைவராக லிங்காயத்- எதிர்க்கட்சி தலைவராக ஒக்கலிகா? பிராமணர்? குழப்பத்தில் டெல்லி!
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவி லிங்காயத் ஜாதியை சேர்ந்த எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு கிடைத்துவிட்டது; இதனைத் தொடர்ந்து மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எந்த ஜாதிக்கு கொடுப்பது என்பது தொடர்பாக 7-வது மாதமாக பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற்று முடிந்தது. கர்நாடகா தேர்தலில் ஆட்சியி இருந்த பாஜக படுதோல்வி அடைந்தது. இதனால் மாநில பாஜக தலைவர் பதவியை நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். கர்நாடகாவில் புதிய காங்கிரஸ் அரசு முதல்வர் சித்தராமையா அரசு பதவியேற்று வாக்குறுதிகளை நிறைவேற்றி 7 மாதங்களை கடந்துவிட்டது.

காங்கிரஸ் கடும் விமர்சனம்: ஆனால் பாஜகவோ, கர்நாடகா மாநில தலைவர் மற்றும் சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் பதவிகளை நியமிக்காமல் இருந்தது. இதனை காங்கிரஸ் தமது ஆயுதமாக கையில் எடுத்து பாஜகவை இடைவிடாமல் விமர்சித்தும் வந்தது. இதனால் கர்நாடக பாஜக தலைவர் கடுமையாக அதிருப்தி அடைந்தனர். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்காவிட்டால் சட்டசபைக்கே போகவும் மாட்டோம் என பாஜக எம்.எல்.ஏக்கள் கொந்தளித்தனர்.
மாநில தலைவராக லிங்காயத்: இந்நிலையில் கர்நாடகா மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பாவின் மகன்தான் விஜயேந்திரா. மாநில பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் சோமண்ணா, மத்திய அமைச்சர் ஷோபா ஷோபா கரந்த்லாஜே, சி.டி.ரவி, அர்விந்த் பெல்லாட், சி.என். அஸ்வந்த் நாராயண் என பலரது பெயர்களும் அடிபட்டன. இந்த ரேஸில் எடியூரப்பா, மகன் விஜயேந்திராவை ஜெயிக்க வைத்துவிட்டார். எடியூரப்பாவின் கையில் இருப்பது 'லிங்காயத்' ஜாதி ஓட்டுகள் என்கிற அஸ்திரம். இந்த ஒற்றை அஸ்திரத்தை கையில் வைத்து மிரட்டியே பாஜக தலைவர் பதவியை மகனுக்கு வாங்கி கொடுத்துவிட்டார் என்கின்றனர் கர்நாடகா அரசியல் பார்வையாளர்கள்.
எதிர்க்கட்சி தலைவராக ஒக்கலிகா?: இதனைத் தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக யாரை பாஜக மேலிடம் நியமிக்கப் போகிறது? என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இரு பெரும் ஜாதிகள்தான் முதன்மையானவை. அதில் ஒன்றான லிங்காயத் ஜாதிக்கு மாநில பாஜக தலைவர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் இயல்பாகவே அடுத்த பெரிய ஜாதியான ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்த ஒருவருக்குதான் சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஒக்கலிகா ஜாதியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோகா, சி.என்.அஸ்வந்த் நாராயண் ஆகிய இருவரில் ஒருவருக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் கிடைக்கலாமாம்; இடிகா ஜாதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.சுனில் குமார், பிராமணரான எஸ். சுரேஷ்குமார் ஆகியோரது பெயரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் விஜயேந்திரா, அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவிடம் இது குறித்து பேசினேன். அடுத்த வாரம் நவம்பர் 17-ந் தேதி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதி முடிவெடுக்கப்பட இருக்கிறது. பாஜகவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளையும் கட்சி தலைமை கேட்டறியும் என்றார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications