சிங்கம் திடீரென கிரண் ராஜ் மீது சீறிப்பாய்ந்து.. வெலவெலத்த ரசிகர்கள்.. பிரபல நடிகருக்கு என்ன ஆச்சு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் சிங்கத்துக்கு பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கிறார் கன்னட நடிகர் கிரண் ராஜ். திடீரென அவரை நோக்கி சீறிப்பாய்கிறது அந்த சிங்கம். அடுத்த சில நொடிகளில் கிரண் ராஜை கீழே தள்ளுவது போலவும், அவர் நிலைதடுமாறுவது போலவும் காட்சிகள் வருகின்றன. இதைப் பார்த்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. சிங்கம் நடிகரை தாக்கிவிட்டதோ என்ற பதற்றம்தான் ஏற்பட்டது.. நடிகர் மீது சிங்கம் பாய்ந்ததுமே பதறிப்போய்விட்டார்கள் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

"கர்ணா" தொடரில் நடித்து வரும் கிரண் ராஜ், அடுத்த படத்துக்காக சிங்கங்களுடன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் கிரண் ராஜை நோக்கி சிங்கம் ஒன்று ஆக்ரோஷமாக பாய்ந்துள்ளது..

Lion Kiran Raj Viral

நடிகர் கிரண் ராஜ்

இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வேகமாக பரவியதும் இணையவாசிகள் பதற்றமடைந்தனர்.. சிலர் அதை பதிவிட்டு, சிங்கம் கிரண் ராஜை தாக்கிவிட்டது என்றனர்.. அவரது ரசிகர்களோ, அதிர்ச்சியடைந்து, கிரண் ராஜுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று கமெண்ட்களை பதிவிட்டனர்.. நண்பர்கள், சக நடிகர்கள் என பலரும் கிரண் ராஜுக்கு நேரடியாகவே போனை போட்டு என்ன நடந்ததது என்று நலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில், கிரண் ராஜே அந்த வீடியோ குறித்து விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.. தான் நன்றாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக ரசிகர்களிடம் கூறிய அவர், வீடியோவில் நடந்தது சிங்கத்தின் தாக்குதல் இல்லை என்று தெரிவித்தார். தன்னை சிங்கம் தாக்கியதாக பரவும் தகவலை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும் நடிகர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

பாய்ந்த சிங்கம்

உண்மையில் நடந்தது என்னவென்றால், கிரண் ராஜ் தனது அடுத்த படத்துக்காக சிங்கங்களுடன் பழகும் பயிற்சியை தொடங்கியிருக்கிறார். அந்த டிரெயினிங்கின் முதல் நாளில் எடுக்கப்பட்ட வீடியோவைத்தான், அவரே சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தார்.. ராக்கி, ரோஜர் என 2 சிங்கங்களுடன் எப்படி பழக வேண்டும், அவற்றின் அசைவுகளை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவர் கற்றுக்கொண்டிருக்கிறார்.

இதில், ராக்கி என்ற சிங்கம் கிரண் ராஜுக்கு ஏற்கெனவே நன்றாக தெரிந்த சிங்கம். அது குட்டியாக இருந்த காலத்திலிருந்தே கிரண் ராஜுவுக்கு தெரியுமாம்.. அது வளர்வதையும் பார்த்தே வந்துள்ளார்.. ராக்கியுடன் ஏற்கெனவே போட்டோக்களையும், வீடியோக்களையும் கிரண் ராஜு எடுத்துள்ளார்.

நடந்தது என்ன

நேற்று டிரெயினிங்கின்போதுகூட, அந்த ராக்கியுடன்தான் அதிக நேரம் செலவிட்டுள்ளார்.. முதல் நாள் டிரெயினிங் முடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுவதற்காக கிளம்பியபோது, திடீரென கிரண் ராஜை நோக்கி ராக்கி ஓடிவந்து கட்டிப்பிடிக்க நெருங்கியிருக்கிறது.. ஆனால் அதை பார்ப்பதற்கு சீறிப்பாய்ந்து தாக்குவது போல தெரிந்துள்ளது.. உண்மையிலேயே தன்னை கட்டிப்பிடிப்பது போலவே சிங்கம் நெருங்கி வந்தது என்கிறார் கிரண்ராஜ்.

இதுகுறித்து கிரண் ராஜ் சொல்லும்போது, "சிங்கங்களுடன் பழகும்போது சில விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.. சிங்கம் ஒருவரை கீழே தள்ள முயன்றால், உடலை வலுவான பக்கமாக சாய்க்க வேண்டும். சிங்கத்திடம் இருந்து விலகிச் சென்றாலும், அதன் பக்கமே முகத்தை வைத்திருக்க வேண்டும்.. சிங்கங்கள் மனிதர்களின் கண்களை கவனித்து புரிந்துகொள்ளும். அவை நம்மை அணைத்துக்கொள்ளவும் விரும்பும்..

நிம்மதியில் ரசிகர்கள்

அப்படியிருக்கும்போது, இந்த வீடியோ ஏன் இவ்வளவு பதற்றத்தை ஏற்படுத்தியது? வீடியோவை சிலர் வேறு கேப்ஷன்களுடன் பகிர்ந்ததுடன், பின்னணி இசையையும் பயங்கரமாக மாற்றியிருக்கிறார்கள்.. அதனால்தான் சிங்கம் உண்மையிலேயே என்னை தாக்கியது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் உண்மையிலேயே, டிரெயினிங் எடுக்கப்படும் இடத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.. நானும் மிகவும் பாதுகாப்பான சூழலில்தான் பயிற்சி எடுக்கிறேன்" என்று விளக்கம் தந்துள்ளார்.. இதற்கு பிறகே அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+