கர்நாடக தேர்தல் தேஜஸ்வி சூர்யா, எடியூரப்பாவின் மகனுக்கு ‘கல்தா’ கொடுத்த பாஜக தலைமை..என்னாச்சு
பெங்களூர்: பாஜகவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில், பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா மற்றும் பிரதாப் சிம்ஹா, பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆகியோரின் பெயர் இந்த பட்டியலில் இல்லை.
கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜகவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.

40- பேர் கொண்ட இந்த பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. ஆனால், ஆச்சர்யபடும் வகையில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா மற்றும் பிரதாப் சிம்ஹா, பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆகியோரின் பெயர் இந்த பட்டியலில் இல்லை.
இத்தனைக்கும் விஜயேந்திர ஷிகாரிபுரா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். பாஜவின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் தேஜஸ்வி சூர்யா பெயர் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறாதது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications