அடேங்கப்பா.. இத்தனை வாரிசுகளா? கர்நாடகாவில் காங்கிரஸ் செய்ததை பாருங்க.. பாஜகவுக்கு தீனி போட்ட ‛கை’
பெங்களூர்: வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் அமைச்சர்களின் மகன், மகள்கள், மனைவி, மருமகன், தம்பி ஆகியோருக்கு அதிகளவில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி வாரிசுகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் ஒரே தேர்தலில் அதிகமானவர்கள் களமிறங்கி உள்ளது விவாதத்தை கிளப்பி உள்ளது.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் 2 கட்டமாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் மே மாதம் 7 ம் தேதியும் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், 2 வது கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறார். மாறாக பாஜகவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சியில் வாரிசுகளுக்கு தான் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் மகன், மகள்கள், மனைவி, தம்பி உள்ளிட்டோருக்கு அதிகமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி பெங்களூர் தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளியின் மகள் பிரியங்கா ஜார்கிகோளி சிக்கோடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் முர்னால் ரவீந்திரா ஹெப்பால்கர் பெலகாவி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
மேலும்ஜவுளித்துறை அமைச்சர் சிவானந்த் பட்டீலின் மகள் சம்யுக்தா பட்டீல் பாகல்கோட்டை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வனம் மற்றும் சுற்றுச்சூழலத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரேவின் மகன் சாகர் காண்ட்ரே பீதர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதோடு கனிமத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் மனைவி பிரபா மல்லிகார்ஜுன் தாவணகெரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த 2014 தேர்தலில் கலபுரகி தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். ஆனால் அதன்பிறகு 2019ல் தோல்வியடைந்தார். இந்த முறை போட்டியிடுவார் என எதிர்பார்க்க்பபட்ட நிலையில் அவரது மருமகன் ராதாகிருஷ்ணாவுக்கு அந்த தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூர் புறநகர் தொகுதி வேட்பாளராக மீண்டும் டிகே சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமாரின் தம்பி தான் இவர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் இருந்த வெற்றி பெற்ற ஒரே காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் தான். இத்தகைய சூழலில் தான் மீண்டும் பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சுரேசுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மறைந்த கன்னட நடிகரான ராஜ்குமாரின் மருமகள் கீதா சிவராஜ்குமாருக்கு காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. சிவமொக்கா தொகுதியில் கீதா சிவராஜ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும் நடிகருமான சிவராஜ்குமாரின் மனைவி ஆவார். அதோடு கீதா சிவராஜ்குமாரின் தந்தை பங்காரப்பா கர்நாடகாவின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் என்பதும், கீதாவின் தம்பி மது பங்காரப்பா தற்போது கர்நாடகாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் கர்நாடகாவில் உள்ள நிலையில் 9 தொகுதிகளில் அமைச்சர்களின் வாரிசுகள், மனைவி, மருமகன், தம்பி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே காங்கிரஸ் கட்சியை பாஜகவினர் வாரிசு அரசியல் செய்வதாக விமர்சனம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் பாஜகவுக்கு ‛தீனி' போடும் வகையில் கர்நாடகா லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஏராளமான வாரிசுகளை களமிறக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications