கொடுமை.. ஆபாச வீடியோ விவகாரத்தில் கைதான ப்ரஜ்வால் ரேவண்ணாவிற்கு வெற்றி.. எக்சிட் போல் கணிப்பு
பெங்களூர்; ஆபாச பாலியல் தொல்லை வீடியோக்கள் விவகாரத்தில் கைதானா எச் டி ரேவண்ணாவின் மகன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணா அவரின் ஹசன் தொகுதியில் வெற்றிபெறுவார் என்று லோக்சபா தேர்தல் தொடர்பான இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன், எச் டி ரேவண்ணாவின் மகன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச பாலியல் தொல்லை வீடியோக்கள் நாடு முழுக்க பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகாவை உலுக்கிய எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் வீடியோக்கள் நாடு முழுக்க பல வாட்ஸ் ஆப் குழுக்களில் புயலை கிளப்பி உள்ளன.
கர்நாடக பென் டிரைவ்: கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் சமயத்தில் பென் டிரைவ் ஒன்று மக்கள் இடையே பரவியது. அதேபோல் சில வீடியோக்களும் மக்களிடையே பரவின. அந்த வீடியோக்களில் ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணா உள்ளார். அதில் அவர் பல பெண்களை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.
வீடியோ விவகாரம்: ப்ரஜ்வால் ரேவண்ணா மட்டுமல்லாமல் பல ஆண்கள் இந்த வீடியோக்களில் உள்ளனர். இதில் பல வீடியோக்களை ரேவண்ணாவே எடுத்துள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண்கள் பலரும் கதறும் வீடியோக்கள்,. பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வீடியோக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டல் ஆக இந்த சம்பவம் மாறி உள்ளது. ப்ரஜ்வால் ரேவண்ணா இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு எதிராக தனி எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பல ஆயிரம் வீடியோக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ப்ரஜ்வால் ரேவண்ணா மூலம் பல ஆயிரம் பெண்கள் கடுமையாக துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. முக்கியமாக இவர்கள் கடுமையாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
உள்ளூர் செய்தி சேனல்களின்படி 2700க்கும் மேற்பட்ட வீடியோ கிளிப்புகள் மக்கள் இடையே பரவி உள்ளன. 300 பேர் ரேவண்ணா மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்து கணிப்பு; இந்த நிலையில்தான் ஆபாச பாலியல் தொல்லை வீடியோக்கள் விவகாரத்தில் கைதானா எச் டி ரேவண்ணாவின் மகன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணா அவரின் ஹசன் தொகுதியில் வெற்றிபெறுவார் என்று லோக்சபா தேர்தல் தொடர்பான இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜேடிஎஸ் சார்பாக போட்டியிட்ட அவர் அந்த கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில்தான் அவருக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் பட்டேலை விட அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இது போக லோக் சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி கர்நாடகாவில், பாஜக 23 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 3 முதல் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கணித்துள்ளது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!












Click it and Unblock the Notifications