'தி கோல்டன் சேரியட்' சொகுசு ரயிலில் ஒரு இன்ப சுற்றுலா.. கொடியசைத்து தொடங்கி வைத்த டிகே சிவக்குமார்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா அரசின் முக்கிய சொகுசு சுற்றுலா ரயிலான 'தி கோல்டன் சேரியட்', 2026-27ஆம் ஆண்டுக்கான புதிய சீசனை அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கேஜே ஜார்ஜ், சுற்றுலாத்துறை செயலாளர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் மற்றும் ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் டிகே சிவக்குமார் பேசுகையில், கர்நாடகாவின் பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையை சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான முறையில் கொண்டு சேர்க்கும் வகையில், தி கோல்டன் சேரியட் ரயில் சேவைக்கு புதிய பரிமாணம் அளிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பொறுப்பேற்ற பின், பிரைடு ஆப் கர்நாடகா போன்ற புதிய பயண வழிகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

DK Shivakumar

'பிரைடு ஆப் கர்நாடகா' என்றால் என்ன?

இதில் முதல் பயணமான 'பிரைடு ஆப் கர்நாடகா' என்பது 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள் கொண்ட சுற்றுலா பயணம். இதில் பந்திப்பூர், மைசூர், ஹளபேடு, சிக்மகளூர், ஹம்பி மற்றும் கோவா ஆகிய சுற்றுலா தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் பயணத்தில் 75 பயணிகள் பயணிக்கும் நிலையில், அவர்களுக்கு சேவை செய்வதற்கு சுமார் 60 பணியாளர்கள் உடன் இருப்பார்கள்.

கோல்டன் சேரியட் ரயிலின் ஸ்பெஷல்

இந்த சொகுசு ரயிலில் தனிநபர் ஓய்வு அறைகள், உணவகப் பெட்டிகள், ஸ்பா மற்றும் நவீன உயர்தர வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ரயில் நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் உள்ளூர் கலாச்சார அனுபவங்களை பயணிகள் பெறும் வகையில் பயணத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

இந்த சுற்றுப்பயணத்தில் பந்திப்பூர் தேசியப் பூங்காவில் வனவிலங்கு சஃபாரி, மைசூரில் மைசூர் அரண்மனை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீரங்கப்பட்டினம் பயணம், பேளூர் - ஹளபேடுவில் ஹோய்சாளா கோயில்கள், சிக்மகளூருவில் காபி தோட்டப் பயணம் மற்றும் மல்நாடு பகுதி வாழ்க்கை முறை அனுபவம், ஹம்பியில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமான விஜயநகர பேரரசின் வரலாற்று நினைவிடங்கள் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் வட கோவாவின் பழமையான தேவாலயங்களுக்கு சென்று பார்வையிட முடியும்.

3 முக்கிய சுற்றுலாப் பயண திட்டங்கள்

2026-27ஆம் சீசனில் 'தி கோல்டன் சேரியட்' ரயில் மூன்று வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது. அதன்படி,

பிரைடு ஆப் கர்நாடகா (5 இரவுகள் / 6 நாட்கள்): பெங்களூரு - பந்திப்பூர் - மைசூர் - ஹளபேடு - சிக்மகளூர் - ஹம்பி - கோவா - பெங்களூரு.

ஜுவல்ஸ் ஆப் சவுத் (5 இரவுகள் / 6 நாட்கள்): பெங்களூரு - மைசூர் - ஹம்பி - மகாபலிபுரம் - தஞ்சாவூர் - செட்டிநாடு - கொச்சி - குமரகம் - பெங்களூரு

க்ளிம்ப்சஸ் ஆப் கர்நாடகா (3 இரவுகள் / 4 நாட்கள்): பெங்களூரு - பந்திப்பூர் - மைசூர் - ஹம்பி - பெங்களூரு.

இதில் 'ஜுவல்ஸ் ஆப் சவுத்' திட்டம் என்பது தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் வகையிலும், 'க்ளிம்ப்சஸ் ஆப் கர்நாடகா' திட்டம் குறுகிய காலத்தில் வனவிலங்குகள் மற்றும் அரச பரம்பரை பாரம்பரியத்தைப் பார்வையிடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

சுற்றுலாத்துறை மூலம் வேலைவாய்ப்புகளையும், உள்ளூர் பொருளாதாரத்தையும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. வனவிலங்குகள், உலகத்தரம் வாய்ந்த பாரம்பரிய தளங்கள், மல்நாடு, கடலோரப் பகுதிகள் என கர்நாடகாவில் சுற்றுலா தளங்கள் அதிகம் உள்ளன. புதிய சுற்றுலா தளங்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரமும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று கர்நாடகா அரசு நம்புகிறது.

தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் கேஜே ஜார்ஜ் பேசுகையில், தி கோல்டன் சேரியட் என்பது வெறும் சொகுசு ரயில் சேவை மட்டுமல்ல.. அது கர்நாடகாவின் கலாச்சாரம், வனவிலங்குகள் மற்றும் விருந்தோம்பலை அனைவருக்கும் வெளிப்படுத்தும் ஒரு பிரம்மாண்ட தளம் என்று தெரிவித்தார். மேலும், 2026-27ஆம் ஆண்டு சீசனில் இந்த 3 முக்கிய திட்டங்களின் கீழ் மொத்தம் 13 சொகுசு சுற்றுப்பயணங்கள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+