‛பேஸ்மேக்கர்’ கருவியில் மல்லிகார்ஜூன கார்கே.. பெங்களூர் மருத்துவமனையில் திடீர் அறுவை சிகிச்சை
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு இதயம் சார்ந்த பிரச்சனை இருந்தது. இதய துடிப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவருக்கு ‛பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருப்பவர் மல்லிகார்ஜூன கார்கே. வயது 82. கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே நேற்று முன்தினம் இரவில் பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் அவருக்கு இதயம் சார்ந்த பிரச்சனை இருந்தது.
அதாவது மல்லிகார்ஜூன கார்கேவின் இதய துடிப்பில் மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு அறுவை சிகிச்சை மூலமாக பேஸ் மேக்கர் கருவி உடலில் பொருத்தப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவிற்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேஸ்மேக்கர் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இன்று அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
பேஸ்மேக்கர் கருவி என்பது இதயத்தின் சீரான இயக்கத்துக்கு உதவும். இதய தசைகளில் பிரச்சனை ஏற்படும்போது அதன் துடிப்பு விகிதம் குறையும். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதனை சரிசெய்யும் வகையில் உடலில் இடதுபக்க மார்பின் இதயத்தின் அருகே பேஸ்மேக்கர் என்ற கருவி அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்படும். இது பேட்டரி உதவியுடன் இயங்கும் கருவியாகும். இது இதய துடிப்பு குறையும்போது அதனை சீர்செய்யும் வகையில் செயல்படும்.
பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே தற்போது நலமாக உள்ளதாக அவரது மகன் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். பிரியங்க் கார்கே கர்நாடகாவில் அமைச்சராக உள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மல்லிகார்ஜூன கார்கேவிற்கு இன்று காலையில் பேஸ்பேக் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது சிறிய, எளிமையான சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சைக்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே நலமாக உள்ளார். அவர் அக்டோபர் 3 (நாளை) முதல் திட்டமிட்டப்படி அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். அவரது உடல்நிலை பற்றி கவலை கொண்ட அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications