பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்: பலருக்கு தொடர்பு இருக்கு.. திடுக் தகவலை சொன்ன தேவகவுடா
பெங்களூர்: கர்நாடகாவை உலுக்கி வரும் பிரஜ்வல் ரேவண்னா விவகாரம் குறித்து முதல் முறையாக முன்னாள் பிரதமரும் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாத்தாவுமான தேவகவுடா மவுனம் கலைத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு உள்ளது எனவும் திடுக் தகவலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா, 300 பெண்களை பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 300 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி தேர்தல் நேரத்தில் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வரும் முன்பாக பிரஜ்வல் ரேவண்னா வெளிநாட்டிற்கு தப்பிவிட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக மதசாரபற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது ஜெர்மனியில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. அவர் பெங்களூர் திரும்ப டிக்கெட் பதிவு செய்து வைத்து இருந்ததாகவும் அதையும் தற்போது ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மட்டும் இன்றி அவரது தந்தை எச்.டி ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தேவகவுடா கருத்து: ரேவண்னாவை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். பிரஜ்வல் ரேவண்னா விவகாரம் பாஜகவுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பாமல் தொடர்ந்து தலைமறைவாகே இருந்து வருகிறார். பிரஜ்வல் ரேவண்னா விவகாரம் குறித்து அவருடைய தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா இதுவரை கருத்து எதையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
பலருக்கு தொடர்பு இருக்கு: இந்த நிலையில், தனது 91-வது பிறந்த நாளில் ரேவண்ணா விவகாரம் குறித்து தேவகவுடா கூறியுள்ளார். தேவகவுடா கூறுகையில், "பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் முறைகேட்டில் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களின் பெயர்களை நான் இபோது வெளியிடுவதாக இல்லை. வழக்கு விசாரணையில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதி நிச்சயம் வெல்லும். ரேவண்ணா விவகாரம் தொடர்பாக பலமுறை குமாரசாமி பேசிவிட்டார். சட்டத்தின் படி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. எச்டி ரேவண்ணாவிற்கு எதிராக பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதை மக்களும் தற்போது உணர்ந்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஆபாச படங்கள்: கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கு மறுநாளே பிரஜ்வல் ரேவண்னா வெளிநாட்டுக்கு சென்றார். அடுத்த சில தினங்களில் பிரஜ்வல் ரேவண்னாவுடன் தொடர்புடைய 300 க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் வெளியாகி கர்நாடக அரசியலை அதிரவைவைத்தது. இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்னா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவரது தந்தை ரேவண்ணா மீது வழக்குபதிவு செய்யப்பட்டதோடு கடந்த 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பேரன் மீதான பாலியல் புகார் வெளிவந்த பிறகு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த தேவகவுடாஅ, இன்று தனது பிறந்த நாளில் பிரஜ்வல் ரேவண்னா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக மவுனத்தை கலைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications