4,000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மக்கள்.. மஸ்கி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொக்கிஷம்.. செம
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மஸ்கியில் நடக்கும் அகழ்வாராய்ச்சியில் 4 ஆண்டுகள் பழமையான பானைகள் உள்பட பல பொருட்கள் கிடைத்துள்ளன.இதன்மூலம் அங்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் குடியேறி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவை எடுத்து கொண்டால் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி அருகே அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது.
இந்த பகுதியில் மவுரிய பேரரர் அசோகர் கால கல்வெட்டு கிடைத்தது. இந்த கல்வெட்டை தொடர்ந்து அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஆண்ட்ரூ எம் பாயர், கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக டாக்டர் பீட்டர் ஜி. ஜோஹன்சன் மற்றும் டெல்லி-என்சிஆரில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹேமந்த் கடம்பி ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மஸ்கியில் மல்லிகார்ஜுன மலையில் உள்ள மல்லிகார்ஜுன கோவில் மற்றும் ஆஞ்சநேய சுவாமி கோவிலை சுற்றி அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது. இங்கு பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலைப்பொருட்கள், பானைகள் உள்பட பல பொருட்கள் கிடைத்துள்ளது.
இந்த பொருட்கள் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வசித்து இருப்பது உறுதி செய்ப்பட்டள்ளது. மஸ்கியில் மொத்தம் 271 இடங்கள் அடையாளம் காணப்பட்டு குழிகள் தோண்டி அகழாய்வு நடந்து வருகிறது.
இதில் கிபி 11 மற்றும் 14ம் நூற்றாண்டுக்கு இடையே மக்கள் வசித்தற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. மண் பானைகள் மற்றும் பானைகள் உள்பட சமையல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி என்சிஆர் ஷிவ் நாடார் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஹேமந்த் கடம்பி கூறுகையில், ‛‛சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு மஸ்கியில் மனித கடியேற்றம் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications