இறைச்சி கடைகள் இருக்கவே கூடாது.. பெங்களூர் பிரதமர் மோடியின் பயணத்தால் கலெக்டர் உத்தரவு
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூர் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் வருகையையொட்டி முன்கூட்டியே 2 நாட்கள் ஆனேக்கல் தாலுகாவில் இறைச்சி கடைகளை மூட பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு தொடர்பான விவரங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளன.

பிரதமர் மோடி இன்று பெங்களூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பெங்களூர் ஆனேக்கல் தாலுகாவில் உள்ள சுவாமி விவேகானந்த் யோகா அனுசந்தானா சம்ஸ்தானாவின் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சியையொட்டி ஆனேக்கல் தாலுகாவில் ஜிகனி வருவாய் கிராமத்துக்கு உட்பட்டுள்ள கல்லுபாலு கிராம பஞ்சாயத்தில் 2 நாட்கள் இறைச்சி கடைகளை மூட அதிரடியாக உத்தரவிடப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான உத்தரவை பெங்களூர் நகர கலெக்டர் காந்தராஜூ பிறப்பித்துள்ளார். அதில், ''கல்லுபாலு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு (163) (1) தடை உத்தரவின் கீழ் நவம்பர் 12ம் தேதி காலை 6 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து 2 நாட்கள் இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன் பறக்கவிடவும், கூட்ட நெரிசலை தவிர்க்க சாலைகளில் போக்குவரத்து மாற்றமும், போராட்டம் நட்த்தவும் தான் தடை விதிக்கப்படும். சில இடங்களில் பிரதமர் மோடி காரில் பேரணி செல்லும்போது இடையூறுகளை தவிர்க்க அந்த குறிப்பிட்ட சாலைகளில் உள்ள கடைகள் சில மணிநேரம் அடைக்கப்படும்.
ஆனால் மோடியின் வருகையையொட்டி 2 நாட்கள் இறைச்சி கடைகள் திறக்க விதிக்கப்பட்ட தடை சர்ச்சையை கிளப்பி உள்ளது. இருப்பினும் மோடியின் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் கேட்டு கொண்டதன் அடிப்படையில் தான் 2 நாட்கள் இறைச்சி கடைகளை மூட கலெக்டர் காந்த ராஜூ உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி இன்று ஒருநாள் சுற்றுப்பயணமாக பெங்களூர் வந்துள்ளார். தனி விமானத்தில் பெங்களூர் வந்த பிரதமர் மோடியை, கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.அதன்பிறகு முதல் நிகழ்ச்சிாக பிரதமர் மோடி சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தானா சம்ஸ்தானாவின் 50 வது ஆண்டு விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
அதன்பிறகு மதியம் 12.45 மணிக்கு பிரதமர் மோடி பெங்களூர் பிங்க் மெட்ரோ லைன் பாதையில் தாவரகெரோ முதல் ஐஐஎம் பெங்களூர் வரையிலான புதிய சேவையை தொடங்கி வைத்து பயணிக்க உள்ளார். பிறகு மதிம் 1.15 மணிக்கு பெங்களூரில் ரூ.15,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
பிறகு பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் பிரதமர் மோடி பாரத் வான் என்ற நிகழ்ச்சியில் மாலை 3.30 மணிக்கு பங்கேற்று மரம் நடவு செய்கிறார். பிறகு மாலை 4 மணிக்கு COOSMS - MysuruPlanetraium நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
