மேகதாதுவில் புதிய அணை! மத்திய அரசை கட்டுப்படுத்த தமிழகத்துக்கு அதிகாரம் கிடையாது! பசவராஜ் பொம்மை ஆக்ரோஷம்
பெங்களூர்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ‛‛மத்திய அரசு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, எந்தவித அணை கட்டவும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அனுமதி வழங்கவும் தனி அதிகாரம் உள்ளது'' என பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தான் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் புதிதாக கர்நாடகம் அணை கட்டினால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது. இதனால் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திப்பட்டு வருகிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்
இந்நிலையில் தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தேர் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டது. அதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தின் கோரிக்கை ஏற்பு
மேகதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசின் கோரிக்கை விடுத்த நிலையில் அதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏற்று நிகழ்ச்சி நிரலில் இடம்பெற செய்தது. மேலும் கர்நாடக அரசு மேகேதாட்டு அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக வாதங்களை முன்வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் சார்பில் மனுத்தாக்கல்
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதில், ‛‛ மேகதாதுவில் 16வது காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. இது விதிமீறலாகும். மேலும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு எதிரானது. மேகதாது குறித்து கூட்டத்தில் விவாதிப்பது காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரம்பை மீறிய நடவடிக்கையாக அமையும். எனவே மேகேதாட்டு குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகம் எதிர்ப்பு
இந்நிலையில் தான் கர்நாடக அரசு இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. தமிழக அரசை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி மைசூரில் அவர் கூறியதாவது: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு சார்பில் மத்திய அரசிடம் தாக்கல் செய்த விரிவான வரைவு அறிக்கை தொடர்பாக ஆலோசிக்க தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதுபோன்று தமிழக அரசு பல்வேறு மனுக்களை செய்துள்ளது.

ஆணையத்துக்கு தனி அதிகாரம்
இந்த விஷயத்தில் தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினால் அதை கர்நாடக அரசு உடனடியாகவும், சரியான முறையிலும் பரிசீலித்து பதில் அளிக்கும். மத்திய அரசு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை. இந்த ஆணையம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் அமைக்கப்பட்ட அமைப்பாகும். இந்த ஆணையத்திற்கு, எந்தவிதமான அணை கட்டவும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அனுமதி வழங்க தனி அதிகாரம் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications