வேலையை காட்டிய காங்கிரஸ்! மேகதாது விஷயத்தில்.. மோடியின் உதவியை நாடிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று, அம்மாநில காங்கிரஸ் அரசு தீவிரமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்படி இருக்கையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்த டிமாண்டை கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கொண்டு சென்றிருக்கிறார்.

இன்று மைசூரில் நடைபெற்ற, 'காஸ்மோஸ்' எனப்படும் விண்வெளி மற்றும் நவீன ஒளியியல் அறிவியல் மையத்தின் திறப்பு விழாவில்,பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமார் உரையாற்றினார். அப்போது அவர் 3 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

Mekedatu Dam

1. மேகதாது சமநிலை நீர்த்தேக்க திட்டத்திற்கான சட்டபூர்வ அனுமதிகளை விரைவு படுத்த வேண்டும்.

2. மேற்கு தொடர்ச்சி மலைகள் குறித்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளை திரும்ப பெற வேண்டும்.

3. ஆயிரம் அரசு பள்ளிகளை கர்நாடகா பொதுப்பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு, நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை(CSR) மாநில அரசின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

இதில் மேகதாது அணை திட்டம் குறித்த கோரிக்கையில், நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று டி.கே சிவகுமார் கூறியிருக்கிறார். அவர் பேசியதாவது, "உச்சநீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கி விட்டது. சட்ட ரீதியான நிலை முடிவுக்கு வந்துவிட்டது. காவிரியின் குறுக்கே உள்ள அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேகதாது கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் நமக்கு தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது.

எனவே இதற்காக சட்டபூர்வமாக நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். இந்த நதி படுகை வழியாக பாயும் காவிரியானது.. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, பெங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு உதவுகிறது. எனவே நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும். இது குடிநீருக்கான ஒரு சமநிலை நீர் தேக்கம். இந்த நீர்த்தேக்கம் தமிழ்நாட்டிற்கு உதவும்" என்று பேசி இருந்தார்.

கர்நாடகாவின் இந்த திட்டத்தை, தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், சிவகுமார் இப்படி பேசி இருப்பது பிரச்சினையை மேலும் பெரிதாக்கி இருக்கிறது. காங்கிரஸும், பாஜகவும் எதிர் எதிர் துருவம் என்று சொல்லிக்கொண்டு.. இப்போது பாஜகவிடம் உதவி கேட்பது என்ன அரசியல்? என பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+