"தமிழர்களே கர்நாடகாவை விட்டு செல்லுங்கள்".. வாட்டாள் நாகராஜ் மிரட்டல்.. பூதாகரமாகும் காவிரி விவகாரம்
பெங்களூர்: ''தமிழர்களை கர்நாடகாவில் இருந்து செல்லுங்கள் என்று சொல்லமாட்டோம். ஆனால் அதற்கான சூழல் வரலாம். காவிரி விஷயத்தில் விஜய், ஸ்டாலின் அரசியல் செய்யக்கூடாது. மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் போராட்டம் நடத்தப்படும். அப்போது தமிழர்கள் எல்லோரும் ரயில், கார் ஏறி செல்ல வேண்டிய நிலை எல்லாரையும் கவுரவமாக ரயில், கார் இருந்தால் ஏறி செல்ல வேண்டும்'' என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.
கர்நாடகாவின் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே தான் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு தலா 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது.

இதனால் கொந்தளித்த கர்நாடகா விவசாயிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். குறிப்பாக கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரும், கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான வாட்டாள் நாகராஜ் மண்டியா மாவட்டம் கேஆர்எஸ் அணையை(தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறக்கப்படும் அணை) முற்றுகையிட முயன்றார்.
வாட்டாள் நாகராஜை போலீசார் தடுத்து நிறுத்தி குண்டுகட்டாக கைது செய்தனர். முன்னதாக வாட்டாள் நாகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவத: ''கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது. தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து செப்டம்பர் 1ம் தேதி தமிழ்நாடு எல்லையில் பந்த் நடத்தப்படும்.அத்திப்பள்ளி எல்லையில் பந்த் நடத்தப்படும். எந்தவொரு தமிழ்நாடு வாகனங்களையும் கர்நாடகாவிற்குள் விடமாட்டோம்.
தமிழர்களை இங்கிருந்து வெளியேறுங்கள் என்று சொல்லமாட்டோம். ஆனால் அதற்கான சூழல் வரலாம். முதல்வர் விஜய், ஸ்டாலினிடம் ஒன்று கேட்டு கொள்கிறேன். மேகதாது விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது. அனுமதி கொடுக்க வேண்டும். அவர்களின் (தமிழகத்தின்) அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் சொல்லிவிட்டார்கள். மேகதாது திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடும் போராட்டம் நடத்தப்படும். மேகதாதுவுக்கு அனுமதி கொடுக்காவிட்டால் தமிழர் எல்லாரையும் கவுரவமாக ரயில், கார் இருந்தால் அதில் ஏறி சென்றுவிட வேண்டும்.
விஜய்க்கு கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் பற்றி கவலை இருந்தால் காவிரி விஷயத்தில் பிரச்சனை செய்யக்கூடாது. மேகதாது அணை விவகாரத்தில் பிரச்சனை செய்யக்கூடாது'' என்று வார்னிங் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications
