சொந்தக்காரன்தானேன்னு நம்பி வீட்டுக்குள்ள விடாதீங்க - சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்
சொந்தக்காரன் முதல் ஆட்டோ ரிக்சா டிரைவர் வரை ஐந்து பேர் மைனர் சிறுமி ஒருவரை சீரழித்துள்ளனர். கர்ப்பமான சிறுமி அளித்த புகாரின் பேரில் கர்நாடக போலீசார் குற்றவாளிகள் மூவரை கைது செய்துள்ளனர். தலைமறைவான இரு
பெங்களூரு: விபரம் அறியாத மைனர் சிறுமியை லாட்ஜிலும், வீட்டிலும் மாறி மாறி சீரழித்துள்ளனர் ஐந்து கயவர்கள். இதில் அந்த சிறுமி கர்ப்பமான நிலையிலும் வெளியே சொன்னா கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். கர்நாடகாவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே போல ஓடிசாவில் 17 மாத குழந்தையை சொந்தக்காரன் ஒருவனே பலாத்காரம் செய்து சீரழித்துள்ளான். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி போராடி வருகிறது.

சிறுமியை சீரழித்தவர்களின் பெயர்கள் கணேஷ் நாயக், கிருஷ்ணப்பா, பவன், புனித் தனுஷ் என்பதாகும். கணேஷ் என்பவன் பாதிக்கப்பட்ட சிறுமியின் கசின். அந்த சிறுமியை சுப்ரமண்யாவிற்கு அழைத்துக்கொண்டு போய் இரண்டு நாட்கள் லாட்ஜில் வைத்து சீரழித்துள்ளான். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த கிருஷ்ணப்பா என்பவன் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். பவன் என்பவன் சிறுமியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டான். போன் மூலம் பேசிய அவன், பெற்றோர்கள் கோவிலுக்கு போயிருந்த தருணத்தை பயன்படுத்தி சிறுமியின் வீட்டுக்கு வந்து பலாத்காரம் செய்துள்ளான்.
ஆட்டோ டிரைவர் தனுஷ் என்பவனும் சிறுமியை விட்டு வைக்கவில்லை. பள்ளிக்கு சென்ற சிறுமியை புனித் என்பவன் சுப்ரமணியா கோவிலுக்கு அழைத்து போய் அங்கே லாட்ஜில் வைத்து சீரழித்து விட்டான். ஐந்து பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமானார். இது பற்றி தனது கசின் கணேஷ் இடம் கூறியதற்கு வெளியே இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளான்.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வர காரணமே சுகாதார நலத்துறை பெண் அதிகாரிகள்தான். சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த அவர்கள் சிறுமியிடம் வந்து பேச்சு கொடுத்த போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளாள் சிறுமி. சிறுமியை பரிசோதித்த ஆஷா அதிகாரிகள், ஐந்து பேரின் மீதும் போலீசில் புகார் அளிக்கக் கூறினர். இதனையடுத்தே தன்னை சீரழித்த நபர்கள் ஐந்து பேரைப்பற்றி போலீசில் புகார் கொடுத்தார் அந்த சிறுமி. ஐவர் மீதும் போக்சோ சட்டம், எஸ்சி எஸ்டி சட்டப்பிரிவு ஐபிசி 376, 506 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். மாயமான இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 மாத குழந்தை பலாத்காரம்
ஓடிசாவின் மயூர்பனாஜ் மாவட்டத்தில் 17 மாத குழந்தையை காமுகன் ஒருவன் சீரழித்துள்ளான். இதில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குற்றவாளியை கைது செய்து கடுமையான தண்டனை தரவேண்டும் என்று பெற்றோர்களும், உறவினர்களும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தையின் உறவினரான குற்றவாளியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்!












Click it and Unblock the Notifications