+2 vs -2.. கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்திய இரண்டு விஷயம்.. காங்கிரசுக்கு சாதகமானது எப்படி?
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக தோல்வி முகத்தில் இருக்கிறது. அதற்கு காரணமே பாஜக பிரதமர் மோடியின் முகத்தை மட்டுமே நம்பி இருந்தது. சித்தராமைய்யா, டிகேஎஸ் சிவகுமார் போன்ற வலிமையான மாநில முகம் பாஜகவில் இல்லை.
பாஜகவில் வலிமையான தலைவரான எடியூரப்பாவிற்கு பதில் பசவராஜ் பொம்மையை முன்னிறுத்தியது பாஜக, ஆனால் எடியூரப்பாவை போல் வலிமையான தலைவர் இல்லை என்பதே கர்நாடகாவில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.
கர்நாடகா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடந்து முடிந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மதியம் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் 122 தொகுதிகளிலும், பாஜக 71 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி (குமாரசாமியின் கட்சி) 24 இடங்களிலும், மற்றவை 7 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி, பாஜகவின் தவறுகளை முன்னிறுத்தியும், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைத்தும் தேர்தலை சந்தித்தது.அத்துடன் கர்நாடாகவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய முகமாக ராகுல் காந்தி இருந்தாலும், மாநில முகங்களாக சித்தராமைய்யா, டிகே சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை முன்னிறுத்தியது-
ஆனால் பாஜகவோ, பிரதமர் மோடியின் புகழை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் மட்டுமே பாஜகவின் வெற்றிக்கு போதவில்லை. காங்கிரஸ் கட்சி போல் மாநிலத்தில் வலிமையான தலைவர்களை பாஜக கர்நாடாகவில் முன்னிறுத்தவில்லை. டிகே சிவகுமார், சித்தராமையா போல் கர்நாடாகவில் வலிமையான மாநில முகங்கள் பாஜகவில் இல்லை.
கர்நாடகா பாஜகவில் வலிமையான தலைவரான எடியூரப்பா அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். பசவராஜ் பொம்மை எடியூரப்பா அளவிற்கு வலிமையான மாநில தலைவர் இல்லை என்பது கர்நாடகா மக்களின் கருத்தாக உள்ளது. ஒருவேளை எடியூரப்பாவை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்து இருந்தாலோ அல்லது பாஜகவில் மாநிலத்தின் வலிமையான முகங்கள் முன்னிறுத்தப்பட்டிருந்தாலோ நிலைமை வேறுமாதிரி ஆகி இருக்கும் என்கிறார்கள் கர்நாடகா அரசியல் நிபுணர்கள்.
ஏனெனில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கணிசமான இடங்களில் மெஜாரிட்டியான முன்னிலையை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. தேர்தல் நேரத்தில் நடந்த சில மாற்றங்கள் பாஜகவிற்கு பின்னடைவாக அமைந்தது என்றும் கூறுகிறார்கள். டிகே சிவகுமார், சித்தராமையா போல், பாஜகவிலும் வலிமையான மாநில தலைவர்கள் உருவாக வேண்டும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications