சித்தராமையா மனைவி கடிதம்.. கிடைத்தது க்ரீன் சிக்னல்.. முடிவுக்கு வரும் முடா பிரச்னை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கடந்த சில மாதங்களாக முடா முறைகேடு வழக்கில் சிக்கி தவித்தார். நெருக்கடி அதிகரித்த காரணத்தால் பிரச்னைக்குரிய 14 மனை பிரிவுகளை முடாவுக்கே திருப்பியளிக்க சித்தராமையாவின் மனைவி கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு முடா நிர்வாகமும் சம்மதம் தெரிவித்திருப்பதால், பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சித்தராமையா முதலமைச்சரானார். அவர் பதவியேற்று ஒரு வருடத்துக்குள் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் முடா வழக்கு அவருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறது.

siddaramaiah muda

சித்தராமையா மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மைசூர் நகர மேம்பாட்டு வாரியமான 'முடா' (MUDA) மூலம் சித்தராமையா மனைவி பார்வதி பெயரில் 14 வீட்டு மனைகள் சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பொறுப்பேற்று சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன.

இதனிடையே கர்நாடகா மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்,, முடா முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இது சித்தராமையாவுக்கு மேலும் நெருக்கடியை அதிகப்படுத்தியது. கடந்த சில வாரங்களாகவே சித்தராமையா மீது நடவடிக்கை பாய உள்ளது. அவரின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளது, கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய சொல்லி, சித்தராமையா கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து சித்தராமையா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது சித்தராமையாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக உள்ளிட்ட கட்சிகள் சித்தராமையாவை கடுமையான விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து சித்தராமையா சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த 14 மனைகளை திருப்பிக் கொடுப்பதாக முடாவுக்கு பார்வதி கடிதம் அனுப்பியிருந்தார். இந்த வழக்கை சமரசத்துக்கு கொண்டு வருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பார்வதியின் கோரிக்கையை ஏற்று, அந்த 14 வீட்டு மனைகளை ஏற்றுக் கொள்ள முடாவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து முடா ஆணையர் ஏ.என். ரகுநாதன் கூறுகையில், முடா விதிகளை நன்கு ஆய்வு செய்தோம். அதில் சம்மந்தப்பட்டவர்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுத்தால் அதைப் பெற்று கொள்ளலாம் என்று விதிகள் சொல்கின்றன.

இதுகுறித்து சட்ட ஆலோசகர்கள், வழக்கறிஞர் ஆகியோரிடம் ஆலோசனை செய்தோம். எல்லாம் சரியாக இருந்த காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை திருப்பிப் பெற்றுக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளோம். உடனடியாக அந்த பத்திரத்தை ரத்து செய்துவிட்டு, அதை சார் பதிவாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளோம்.

முன்னதாக லோக் ஆயுக்தா போலீஸ், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, சித்தராமையா, அவரின் மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகர்ஜனா சுவாமி, தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதேபோல அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது அந்த மனை திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதால், இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+