சித்தராமையா பதவியை காவு கொள்ளுமா கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பு? முடா முறைகேடு வழக்கு- முழு விவரம்!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது முடா நில முறைகேடு வழக்கு. ஆளுநர் தம் மீது வழக்கு தொடர அனுமதி கொடுத்ததற்கு எதிராக முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்திருக்கிறது. சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி அளித்தது செல்லும் எனவும் கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் சித்தராமையாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கும் முடா வழக்கின் விவரம்:

- முடா என்பது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்
- 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு முடா நிறுவனம் 14 வீட்டு மனைவிகளை ஒதுக்கீடு செய்தது
- சித்தராமையா மனைவிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்தது சட்டவிரோதம் என்பது புகார்
- சித்தராமையா மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநரிடம் சமூக ஆர்வலர்கள் டிஜே ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் மனு கொடுத்தனர்.
- சித்தராமையா விளக்கம் தர வேண்டும் என ஆளுநர் கெலாட், நோட்டீஸ் அனுப்பினார்
- ஆளுநர் நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை தீர்மானத்தை நிராகரித்தார் ஆளுநர் கெலாட்
- சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் டிஜே ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோருக்கு ஆகஸ்ட் 17-ந் தேதி அனுமதி கொடுத்தார் ஆளுநர் கெலாட்.
- ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
- தம் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்ததை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி மனுத் தாக்கல் செய்தார். முதல் நாள் விசாரணையிலேயே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
- கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகரபிசன்னா இந்த வழக்கை விசாரித்தார்
- கர்நாடகா உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஆளுநர் கெலாட் தரப்பில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்; சித்தராமையா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், அட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி ஆஜராகினர்.
- கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கடந்த 12-ந் தேதியுடன் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.
- கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா சற்று முன்னர் அளித்த தீர்ப்பில், சித்தராமையாவின் மனுவை டிஸ்மிஸ் செய்தார். ஆளுநர் கெலாட், சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்தது செல்லும் என தீர்ப்பளித்தார்.
- ஆளுநரின் அனுமதியை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் சித்தராமையா மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
- சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தக் கூடும்.
- ஆளுநர் அனுமதியை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் சித்தராமையா மேல்முறையீடு செய்யக் கூடும்
- கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில் சித்தராமையா முதல்வர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா? சித்தராமையாவுக்கு நெருக்கடி உருவாகுமா? என்பது அடுத்தடுத்து தெரியவரும். இதனால் கர்நாடகா அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications