ஜன.29 உங்களுக்கு கடைசி நாள்.. குமாரசாமி, பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்.. திக் கடிதம்
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு மர்ம நபர் விடுத்த கொலை மிரட்டல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு மர்ம நபர் விடுத்த கொலை மிரட்டல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவை மையமாக கொண்டு நிறைய இந்து மடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சில மடங்கள் அரசியல் ரீதியாக நிறைய முடிவெடுக்கும் சக்தியை கொண்டது. அந்த வகையில் முக்கியமான மடமாக பார்க்கப்படும் பெலகாவியில் உள்ள லிங்காயத்துகளின் கிட்டூர் நிஷ்கல் மண்டப படத்திற்கு இன்று மிரட்டல் கடிதம் ஒன்று சென்றுள்ளது.

மர்ம நபர் எழுதி உள்ள அந்த கடிதத்தில், இந்த மடத்தின் அதிபர் நிஜகுணந்த சாமிக்கும் அவரின் தொண்டர்களுக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுகிறோம். நீங்கள் உங்கள் மதத்தை அவமதித்துவிட்டீர்கள். உங்கள் பின்தொடர்பாளர்களும் இந்து மதத்தை அவமதித்துவிட்டனர்.
இதற்கு உங்களுக்கு சரியான தண்டனை அளிக்கப்டும். வரும் ஜனவரி 29ம் தேதிதான் நீங்கள் கடைசியாக மூச்சு விடுவீர்கள். கீழே இருக்கும் பட்டியலில் உள்ளவர்களும் அதே நாளில் கொலை செய்யப்படுவார்கள். உங்கள் பயணம் முடிய போகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ், சிபிஐ மூத்த உறுப்பினர் பிருந்தா காரத், பஜ்ரங் தளம் மூத்த தலைவர் மஹிந்திரா குமார், நீடுமமிடி சுவாமி, ஜெய்பிரகாஷ சுவாமி, நடிகர் சேட்டன் குமார், பிடி லலிதா நாயக், மகேஷ் சந்திரா குரு உட்பட 15 பேருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் எதற்காக விடுக்கப்பட்டது. யார் விடுத்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த மிரட்டல் தொடார்பாக் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த லிஸ்டில் இருக்கும் 15 பேருக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலுக்கு குமாரசாமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யாரோ எங்களை பழிவாங்க வேண்டும் என்று இப்படி திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications