"சார், முஸ்லீம்ன்னா" தீவிரவாதிதானா.. உங்க மகனை அப்படி சொல்வீங்களா.. பேராசிரியரையே அலற வைத்த மாணவன்

முஸ்லிம் மாணவனை பயங்கரவாதி என்று அழைத்த ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஒரு முஸ்லிம் மாணவரை பார்த்து, தீவிரவாதி என்று அழைத்த பேராசிரியருக்கு எதிரான கண்டனங்கள் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன... இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியையும், மக்களின் கோபத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.

சாதி, மதம் இல்லாத சமுதாயத்தையே எத்தனையோ அறிஞர்கள் வலியுறுத்தி சென்றுள்ள நிலையில், அந்த அவலம் இன்னமும் தொடர்வது வேதனைக்குரியது.

அனைத்து சாதீய சங்கிலியையும் அறுத்தெறிய கூடிய வலிமை, கல்விக்கு ஒன்றே இருப்பதாக நம்பப்பட்டு வருகிறது.. ஆனால், அந்த கல்வி நிலையங்களிலும் சாதியும், மதமும் நுழைந்து ஆட்டுவித்து வருவது அதிர்ச்சி கலந்த கவலையையே உண்டு பண்ணி வருகிறது.

 பீஃப் கறி

பீஃப் கறி

இந்த கவலை, பாஜக ஆட்சி அமைந்தது முதலே நாட்டு மக்களுக்கு தொற்றிக் கொண்டுவிட்டது என்றும், இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு வருவது சிறுபான்மையின மக்கள் என்பது வேதனைக்குரிய விஷயம் என்றும் பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.. மசூதியில் ஸ்பீக்கர்கள் முதல், மாட்டிறைச்சி விவகாரம், ஹிஜாப் வரை நடக்கும் நிகழ்வுகளையும் நாட்டு மக்கள் கவனித்தும் வருகிறார்கள்.. இதில் கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை, கிட்டத்தட்ட ஒரு குட்டி குஜராத் போலவே மாறி வருவதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 கிளாஸ்ரூமில்

கிளாஸ்ரூமில்

இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு சம்பவம், அதே கர்நாடக மாநிலத்தில் வெடித்து கிளம்பி உள்ளது... அவர் ஒரு பேராசிரியர்.. எம்ஐடி என்று சொல்லப்படும் பெங்களூருவின் மணிபால் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.. கடந்த 26ம் தேதி வெள்ளிக்கிழமை, இந்த பேராசிரியர் தன்னுடைய வகுப்பில், கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.. அப்போது பாடத்தை கவனித்து கொண்டிருந்த ஒரு முஸ்லிம் மாணவர், பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்டுள்ளார்.. இப்படி சந்தேகம் கேட்டது, அந்த பேராசிரியருக்கு பிடிக்கவில்லை.. ஆத்திரம் வந்துவிட்டது.. அதனால், அந்த முஸ்லிம் மாணவரை பார்த்து, 'பயங்கரவாதி' என்று திட்டி உள்ளார்..

 கிளாஸ் ரூமில்

கிளாஸ் ரூமில்

அத்துடன், இஸ்லாம் மதத்தை சுட்டிக்காட்டி, பயங்கரவாதி என்று சொன்னாராம்.. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டது. ஆசிரியர், அந்த மாணவனை இப்படி சொன்னதை, அதே கிளாஸில் உள்ள சக மாணவர்கள் இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள். இந்த வீடியோ மொத்தம் 45 விநாடிகள் ஓடுகிறது.. அந்த வீடியோவில், மாணவர்கள் எல்லாரும் கிளாஸ் ரூமில் உட்கார்ந்து பாடத்தை கவனிக்கிறார்கள்.. அப்போது அந்த் பேராசியர் பாடம் எடுக்கிறார்.. கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த, ப்ளூ கலர் சட்டை அணிந்த இஸ்லாம் மாணவர், ஏதோ சந்தேகம் கேட்க, நீ முஸ்லிம்.. அதனால் நீ ஒரு தீவிரவாதி என திட்டுகிறார்.

 ஜாலி மகன்

ஜாலி மகன்

இதைக் கேட்டதும் அந்த மாணவருக்கு கோபம் வந்துவிட்டது.. அதிலும் சக மாணவர்கள் முன்னிலையிலேயே இப்படி சொல்லிவிட்டதால், நேருக்கு நேராக பேராசிரியரிடமே கேள்வி எழுப்பினார்.. நீங்கள் ஒரு ஆசிரியர், எப்படி என்னை பயங்கரவாதி என்று சொல்லலாம்.. மாணவர்கள் முன்னிலையில் ஒரு பேராசிரியர் இப்படி பேசலாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.. இந்த கேள்விகளை அந்த பேராசிரியர் எதிர்பார்க்கவில்லை.. உடனே சுதாரித்து கொண்டார்.. "அப்படியில்ல.. நீ என் மகன் மாதிரி.. ஜாலிக்குதான் அப்படி உன்னை கூப்பிட்டேன் என்கிறார்..

 ஜாலி சார்

ஜாலி சார்

அப்போதும் மாணவனுக்கு கோபம் அடங்கவில்லை.. ஜாலிக்காக கூட எப்படி சார் அப்படி கூப்பிடலாம்? உங்க பையனை இப்படித்தான் பயங்கரவாதி என்றுகூப்பிடுவீங்களா? தீவிரவாதி என்று கூப்பிடுவீங்களா? நான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே இப்படி தினம் தினம் பிரச்சனையை சந்தித்து வருகிறேன்.. ஒருவரின் பெயரை மட்டுமே வைத்து எப்படி அவனை தீவிரவாதி என்று சொல்லுவீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை மாணவர் முன்வைக்கவும், அந்த பேராசிரியர் ஆடிப்போய்விட்டார். உடனே வேறு வழியில்லாமல், அந்த பேராசிரியர் மன்னிப்பு கேட்டார்.. அப்போதும் மாணவரின் சினம் தணியவில்லை..

 தணியாத சினம்

தணியாத சினம்

"நீங்க இப்போ மன்னிப்பு கேட்டால் மட்டும் பேசியது இல்லை என்றாகிவிடுமா? எதுவுமே மாறாது.. நீங்கள் எப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர் என்பதை உங்கள் பேச்சே வெளிப்படுத்திவிட்டது" என்றார் அந்த மாணவர்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பேராசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. விசாரணை முடியும் வரை அந்த பேராசிரியர் பாடம் நடத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டாலும், அவர் மீது எந்த புகாரும் வழங்க போவதில்லை என்று மாணவர் சொல்லி உள்ளார்.. இந்த வீடியோவுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+