என்னங்க இது.. பெங்களூரில் இன்று ஆட்டுக்கறி கிடைக்காமல் தட்டுப்பாடு! பின்னணியில் எம்எல்ஏக்கள்!
பெங்களூர்: சண்டே.. கறிக்குழம்பு இல்லாமல் சாப்பிட்டா ருசிக்குமா?. இதற்கு விடை கேட்டால் நம்மில் பலரும் ‛ருசிக்காது' என்றே பதிலளிப்போம். இதனால் தான் ஒவ்வொரு சண்டேயும் நம் வீட்டு சமையலறையில் கோழிக்கறி, ஆட்டுக்கறி மிதக்கும். ஆனால் பாருங்க, இன்று பெங்களூரில் பல வீடுகளில் ஆட்டுக்கறி சமையல் செய்யவே இல்லை?. அட என்னங்க இது.. எல்லோரும் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறிட்டீங்களா என கேட்டால் அதுதான் இல்லை.. உண்மையில் இதன் பின்னணியில் வேறு விஷயம் உள்ளது.
அதாவது இன்று சண்டே.. அனைவருக்கும் பேவரைட்டான ஒரு தினம் அல்லவா. குறிப்பாக அலுவலக பணிகள் செய்வோர் விடுமுறை என்பதால் அறக்க பறக்க பெட்டில் இருந்து கண்விழிக்காமல் அயர்ந்து தூங்கும் ஒருநாள். அப்படித்தான் இன்றும் பல பேருக்கு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தது.

அதுக்கப்பறம் டீயோ, காபியோ குடித்துவிட்டு காலை டிபனை ஹோட்டலில் வாங்கி சுவைப்பதை வாடிக்கையாக வைத்துவிட்டு மதியம் ‛லஞ்ச்' பிரிபரேஷன் செய்ய தயாராவோம். இதில் அனைவரின் முதல் சாய்ஸ் என்பது அசைவமாக தான் இருக்கும். வாரத்தில் 6 நாள் பெரும்பாலும் சைவ உணவு சாப்பிடுவதால் தான் என்னவோ சண்டை ஆனாலே அசைவ உணவை நினைத்து நாக்கில் உமிழ்நீர் சுரக்கிறது.
அப்படியாக இன்று அசைவ பிரியர்களின் நாக்கில் எச்சில் ஊறவே நேராக பலரது கால், சைக்கிள், டூவீலர்கள் சென்ற இடம் தான் கறிக்கடை.. இதனால் தான் பெங்களூரில் முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களின் ஓரம் உறித்து தொங்கவிடப்பட்ட ஆடுகள் பாவம்போல் தொங்கும். கொன்ற பாவம் தின்றால் போச்சு என்பது நாமும் ‛அண்ணா, ஒரு கிலோ கறி தாங்க.. எலும்பு, கொழுப்பு இல்லாமல் தனிக்கறியாக தாங்க'' என கேட்போம். இது வழக்கமான நடைமுறை தான்.
ஆனால் இன்றைய தினம் பெங்களூரில் உள்ள கறிக்கடை வழக்கத்துக்கு மாறாக வெறிச்சோடி கிடந்தது. என்னங்க இது.. சண்டே ஆனாலே எப்போதும் கூட்டமாக இருக்கும் கறிக்கடை வெறிச்சோடி இருக்குது. என்ன விஷயம் என பக்கத்தில் சென்று கறிவெட்டும் அண்ணனிடம் விசாரித்தோம். அப்போது அவர் சொன்ன விஷயம் தான், ‛‛பெங்களூரில் ஆட்டுக்கறிக்கு தட்டுப்பாடு வந்துட்டுப்பா. என்னனு தெரியலை பெங்களூர் சந்தையில் உள்ள ஆடுகளை எல்லாத்தையும் மொத்தம் மொத்தமாக வாங்கீட்டாங்க தம்பி'' என்றார்.
‛‛என்னங்க இது.. ஒரு வீட்டு விசேஷம் என்றால் 10, 20, ஏன் 100, 200 ஆடுகள் கூட வாங்குவாங்க.. ஆனால் சந்தையில் இருக்கிற மொத்த ஆட்டையுமா வாங்குவாங்க?'' என அடுத்த கேள்வி கேட்க சட்டென திரும்பிய அண்ணன், ‛‛மேலும் கீழுமாக என்னை ஒரு சில செகண்ட் பார்த்துவிட்டு.. இந்த பாருப்பா நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்ததுலா.. அதில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தான் சந்தையில் இருந்து முன்கூட்டியே மொத்தம் மொத்தமாக ஆடுகளை வாங்கிட்டு போய்ட்டாங்க'' என்றார்.

அப்போது தான் புரிஞ்சது. பெங்களூரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தரப்பில் மொத்தம் மொத்தமாக சந்தைகளில் ஆடு வாங்கி சென்று தங்களின் ஆதரவாளர்களுக்கும் கறிவிருந்து கொடுப்பதும், கறிக்கடை அண்ணணுக்கும், கறிக்கடை பாய் அங்கிளுக்கும் ஆடு கிடைக்காமல் போனதும் தெரியவந்தது.
இதனால் மொத்தமாக இயல்பாக வழக்கமாக சண்டேயில் உறிக்கும் ஆடுகளின் எண்ணிக்கை பல கறிக்கடைகளில் கணிசமாக குறைந்துள்ளதோடு இன்று பெங்களூரில் பல இடங்களில் செயல்பட்டு வரும் கறி கடைகள் ஆடு தட்டுப்பாட்டால் வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே விற்பனையை முடித்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
உண்மையிலேயே எம்எல்ஏக்கள் சார்பில் வாங்கி செல்லப்பட்ட ஆடுகள் குழம்பில் கொதித்த அதேவேளையில் ‛அய்யய்யோ என்னங்க இது எங்களுக்கு ஆட்டுக்கறி கிடைக்கலையே' இல்லாமல் இப்படி மொத்தமாக ஆட்டை வாங்கிட்டு போய்ட்டீங்களே என பலரும் புலம்பியபடி கோழிக்கறி, மீன் வகைகளை நாடிச் சென்றனர்.
பெங்களூரை பொறுத்தமட்டில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 16 இடங்களில் பாஜகவினர் வெற்றி பெற்ற நிலையில் 12 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications