காங்கிரசா தாலியை பறிக்கும்? இல்லை! எங்கள் அம்மா நாட்டுக்காக தாலியை இழந்தவர்: பிரியங்கா காந்தி பதிலடி
பெங்களூர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி உட்பட நகைகளை எல்லாம் பறித்துக் கொள்ளும் என்று பிரதமர் பேசியதற்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார். மேலும், இந்த நாட்டிற்காக தனது தாய் சோனியா காந்தி தாலியை இழந்ததாகவும் உருக்கமாக பேசினார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. இன்னும் ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மோடி பேச்சு: இதற்கிடையே சமீபத்தில் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெண்களின் தாலி உட்பட அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்து அதை மறுபங்கீடு செய்யும் என்று கூறியிருந்தார். இது மிக பெரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதற்கிடையே இன்று பெங்களூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு காங்கிரஸின் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.
பிரியங்கா காந்தி பதிலடி: பெங்களூரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "கடந்த இரண்டு நாட்களாக, உங்கள் தாலி மற்றும் தங்கத்தை காங்கிரஸ் பறிக்க விரும்புவதாக சிலர் கூறி வருகிறார்கள். நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன்.. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது.. அதில் 55 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ் யாருடைய தங்கத்தையாவது பறித்துள்ளதா?
போர் நடந்தபோது, இந்திரா காந்தி தனது தாலி உட்பட அனைத்து தங்கத்தையும் நாட்டிற்காக தியாகம் செய்தார். என் தாயின் தாலி இந்த நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது.
உங்களுக்கு என்ன வேண்டும்: பிரதமர் மோடி திடீரென 400 சீட்களுக்கு மேல் வென்று அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பிரதமர் கூறுகிறார்... திடீரென சில சமயம் என்னை எதிர்க்கட்சிகள் அவமானப்படுத்துவதாக கூறுகிறார். அல்லது திடீரென சில சமயம் மதம் பற்றி பேசுகிறார். உலகின் மிகவும் சிறந்த நகரங்களில் ஒன்றான பெங்களூரில் வசிக்கும் நீங்கள் சொல்லுங்கள்.. உங்களுக்கு இது போன்ற ஒரு தலைவர் தான் வேண்டுமா" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தாலியின் முக்கியத்துவம்: மேலும் தாலி குறித்த பிரதமர் மோடியின் பேச்சை குறிப்பிட்டு பேசிய அவர், "தாலியின் முக்கியத்துவத்தை மோடி புரிந்து கொண்டிருந்தால், அவர் இப்படி பேசியிருக்க மாட்டார். பணமதிப்பு நீக்கம் நடந்தபோது பெண்களின் சேமிப்பு காலியானது. அப்போது பெண்கள் தங்கள் தாலியை அடமானம் வைத்தனர். அப்போது பிரதமர் மோடி எங்கே இருந்தார்? விவசாயிகள் போராட்டத்தின் போது, 600 விவசாயிகள் உயிரிழந்தனர்.. அந்த விதவைகளின் தாலி பற்றி மோடி நினைத்தாரா?" என்று ஆவேசமாக பேசினார்.
மோடியின் பேச்சு: முன்னதாக இரு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக நாட்டின் செல்வத்தை மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்று கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் அனைவரது சொத்துக்களும் கணக்கிடும். மேலும், நமது பெண்களின் தங்கத்தை கைப்பற்றிவிடுவார்கள். பிறகு அதை மறுபங்கீடு செய்து ஊடுவல்களர்களுக்கு தருவதே அவர்கள் தேர்தல் வாக்குறுதி" என்று கூறியிருந்தார்..
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு மிக பெரிய சர்ச்சையாகி மாறியது. எதிர்க்கட்சியை சேர்ந்த பலரும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.. மேலும், மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications