நடிகை சவுந்தர்யா மரணத்தில் மர்மமா? நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பா? கணவர் ரகு பரபர விளக்கம்!
பெங்களூர்: நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் மோகன் பாபுவும் தங்களது குடும்பத்தினரும் நெருங்கிய நட்புறவுடன் பழகி வருவதாகவும் சவுந்தர்யாவின் மரணத்தில் மோகன் பாபுவுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் கணவர் ரகு தெரிவித்துள்ளார்.
தமிழில் கார்த்திக் நடித்த பொன்னுமணி திரைப்படம் மூலம் திரை உலகத்துக்கு அறிமுகமானவர் நடிகை. ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய நட்சத்திரமாக வலம் வந்த நிலையில் பாஜகவில் இணைந்தார்.

2004-ம் ஆண்டு பாஜகவுக்காக பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் சென்ற போது விபத்தில் சிக்கி நடிகை சவுந்தர்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகையும் அரசியல் வட்டாரங்களையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்தது.
நடிகை சவுந்தர்யா மரணம் அடைந்து 20 ஆண்டுகள் கழித்து ஆந்திராவைச் சேர்ந்த சிட்டி மல்லு திடீரென சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது தொடர்பாக சிட்டி மல்லு கூறுகையில், நடிகை சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் ரூ100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது; இந்த நிலத்தை நடிகர் மோகன் பாபு, சவுந்தர்யாவிடம் இருந்து வாங்க முயற்சித்தார். ஆனால் சவுந்தர்யா, மோகன்பாபுவுக்கு நிலத்தை தர மறுத்துவிட்டார். இதனால் சவுந்தர்யாவின் மரணத்துக்கும் மோகன் பாபுவுக்கும் தொடர்பிருக்கிறது; இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.
நடிகை சவுந்தர்யா மரணம் தொடர்பாக சிட்டி மல்லு எழுப்பிய சர்ச்சை தென்னிந்தியாவை மீண்டும் பரபரப்பாக்கியது. இது தொடர்பாக பெங்களூரில் வசித்து வரும் நடிகை சவுந்தர்யாவின் கணவரான ரகு கூறுகையில், சவுந்தர்யா மரணத்துக்கும் மோகன் பாபுவுக்கும் எந்த தொடர்புமே இல்லை; மோகன் பாபு, எங்கள் குடும்பம் நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறது. ஆகையால் ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்; இத்தகைய செய்திகளுக்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கிறோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications