திக் திக் வீடியோ.. தண்டவாளத்தில் படுத்து கொண்ட பெண்... மின்னல் வேகத்தில் போன ரயில்!
தண்டவாளத்தில் படுத்து பெண் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது
Recommended Video
பெங்களூரு: தண்டவாளத்துக்கு நடுவில் பெண் படுத்து கொள்ள.. டிரெய்ன் ஒன்று மின்னல் வேகத்தில் போகிறது.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் பலவற்றை நாம் பார்த்திருந்தாலும், இந்த பரபரப்பு, திகில் நிறைந்த வீடியோ காட்சி பார்ப்போரை கிடுகிடுக்க வைத்துள்ளது.
கலபுரகி மாவட்டம் சித்தாபுரா டவுன் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் முனிபாய். 62 வயதான இவர், நேற்று முன்தினம் சித்தாபுரா ரெயில்வே ஸ்டேஷனுக்கு போனார்.

சரக்கு ரெயில் ஒன்று தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. அதனால் வேகமாக கடந்துவிடலாம் என்று முனிபாய் பிளாட்பாரத்தில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஆனால் மெதுவாக வந்து கொண்டிருந்த அந்த சரக்கு ரெயில் திடீரென வேகம் எடுத்து வந்தது.
இதை பார்த்து முனிபாய் அதிர்ச்சி அடைய, பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். பதட்டத்தில் இந்த ஐடியா எப்படி வந்ததோ தெரியாது, முனிபாய் அப்படியே தண்டவாளத்தில் காலை நீட்டி குப்புற படுத்து கொண்டார்.
ரயில் வேகமாக கடந்தாலும், கொஞ்சம்கூட அடியில் படுத்திருந்த முனிபாய் மீது மோதவில்லை. கடைசியாக, ரயில் சென்றபிறகு முனிபாய் தண்டவாளத்தில் இருந்து எழுந்தார். இதை பார்த்ததும் பிளாட்பாரத்தில் நின்றிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொண்ட ஐடியாவுக்கு பலர் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள்.
முனிபாய்க்கு ஒரு சிறு காயமும் அவருக்கு ஏற்படவில்லை. இந்த காட்சியை பயணிகளே செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் போட்டுள்ளனர். மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர்பிழைத்த அந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications