திப்பு சுல்தான் சர்ச்சை, பிராந்திய பாகுபாடு கர்நாடகா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? சர்வே
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு என்டிடிவி - சிஎஸ்டிஎஸ் உடன் இணைந்து தேர்தல் சர்வே நடத்தியது.
சிஎஸ்டிஎஸ் அமைப்பு கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை கர்நாடகாவில் 2143 வாக்காளர்களிடம் கருத்துக்களை பெற்றது. பல்வேறு கேள்விகளை முன்வைத்து மக்களின் கருத்துக்களை பெற்று, அதை வெளியிட்டிருக்கிறது என்டிடிவி.

அதில் இரண்டு முக்கியமான கேள்விகளை இப்போது பார்ப்போம்.
திப்பு சுல்தான் சர்ச்சை தேர்தலில் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று ஒரு கேள்வி கேட்டிருந்தது. அதற்கு 74 சதவீதம் பேர் ஆம் என்று கூறிருக்கிறார்கள். அதேபோல் 22 சதவீதம் திப்புசுல்தான் சர்ச்சை பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறுகிறர்கள். 4 சதவீதம் பேர் எந்த பதிலும் கூறவில்லை.
திப்பு சுல்தான் சர்ச்சை நியாயமானது என்று 30 சதவீதம் காங்கிரஸ் ஆதரவாளர்களும், 54 சதவீத பாஜக ஆதரவாளர்களும் கூறியிருக்கிறார்கள். ஓரளவு நியாயமானது என்று 35 சதவீத காங்கிரஸ் ஆதரவாளர்களும், 48 சதவீத பாஜக ஆதரவாளர்களும் கூறியிருக்கிறார்கள் . அதேநேரம் திப்புசுல்தான் சர்ச்சை எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று 58 சதவீதம் காங்கிரஸ் ஆதரவாளர்களும், 14 சதவீத பாஜக ஆதரவாளர்களும் கூறியிருக்கிறார்கள்.
இரண்டாவது கேள்வியாக பிராந்திய பாகுபாடு பிரச்னை இந்த முறை வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கேட்டிருக்கிறார்கள். அதாவது வட கர்நாடகா vs மற்ற பிராந்தியங்களிடையே பாகுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு 66 சதவீதம் பாகுபாடு காட்டப்படுவதாக கூறியுள்ளார்கள். 28 சதவீதம் பாகுபாடு இல்லை, நியாயமாக நடப்பதாக கூறியிருக்கிறார்கள். எல்லா பகுதியைப் போல் வடகர்நாடகாவையும் பார்க்கிறார்கள் என்று 19 சதவீதம் பேர் கூறுகிறார்கள். 12 சதவீதம் பேர் எந்த பதிலும் கூறவில்லை.
பெங்களூருவிற்கு மற்ற பகுதிகளைவிட அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதா என்ற கேள்விக்கு, ஆம் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக 66 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். குறைவான முக்கியத்துவமே தரப்படுவதாக 16 சதவீதம் பேரும், இல்லை எல்லா பகுதிக்கும் சரியான முக்கியத்துவமே தருகிறார்கள் என்று 10 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள். 8 சதவீதம் பேர் எந்த பதிலும் கூறவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications