முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து.. கர்நாடக அரசுக்கு ஆதரவா? எதிர்ப்பா? 50/50 ரிசல்ட் -கருத்துக்கணிப்பு
பெங்களூரு: இந்த மாதம் கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அங்கு அம்மாநில பாஜக அரசு சமீபத்தில் கொண்டு வந்து நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து விவகாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து என் டிடிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்து உள்ளது.
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசின் ஆட்சி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வரும் கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பல்வேறு ஊடகங்கள் இது தொடர்பாக வெளியிட்டு இருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சி அமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று என்டிடிவி - சிஎஸ்டிஎஸ் இணைந்து கர்நாடக மாநில தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளன.
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டன. இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் சமீபத்தில் கர்நாடக மாநில அரசால் மாற்றப்பட்ட இடஒதுக்கீடு சதவீதம், இஸ்லாமியர் இடஒதுக்கீடு நீக்கம் குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
இதில் 33 சதவீதம் பேருக்கு மட்டுமே இடஒதுக்கீடு விகிதம் மாற்றப்பட்டது தெரிந்து உள்ளது. இதில் பழங்குடியினர் விகிதம் உயர்த்தப்பட்டதற்கு 26 சதவீதம் பேர் முழு ஆதரவையும், 41 சதவீதம் பேர் லேசான ஆதரவையும், 18 சதவீதம் பேர் லேசான எதிர்ப்பையும், 13 பேர் முழு எதிர்ப்பையும் தெரிவித்து உள்ளார்கள். பட்டியலின இடஒதுக்கீ விகிதம் உயர்த்தப்பட்டதற்கு 27 சதவீதம் பேர் முழு ஆதரவையும், 40 சதவீதம் பேர் லேசான ஆதரவையும், 17 சதவீதம் பேர் லேசான எதிர்ப்பையும், 14 பேர் முழு எதிர்ப்பையும் தெரிவித்து உள்ளார்கள்.
புதிய லிங்காயத்து கோட்டாவுக்கு 28 சதவீதம் பேர் முழு ஆதரவையும், 45 சதவீதம் பேர் லேசான ஆதரவையும், 12 சதவீதம் பேர் லேசான எதிர்ப்பையும், 13 பேர் முழு எதிர்ப்பையும் தெரிவித்து உள்ளார்கள். புதிய வொக்காலிகா கோட்டாவுக்கு 27 சதவீதம் பேர் முழு ஆதரவையும், 37 சதவீதம் பேர் லேசான ஆதரவையும், 20 சதவீதம் பேர் லேசான எதிர்ப்பையும், 13 பேர் முழு எதிர்ப்பையும் தெரிவித்து உள்ளார்கள்.
இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு 23 சதவீதம் பேர் முழு ஆதரவையும், 25 சதவீதம் பேர் லேசான ஆதரவையும், 23 சதவீதம் பேர் லேசான எதிர்ப்பையும், 35 பேர் முழு எதிர்ப்பையும் தெரிவித்து இருக்கின்றனர். இதில் பாஜக ஆதரவாளர்கள் அனைத்துக்கும் முழு ஆதரவையும் காங்கிரஸ் கட்சியினர் முழு எதிர்ப்பையும் பதிவு செய்து உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications